US Box Office: யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்முதலிடத்தில் எஃப் 9 : பாஸ்ட் சாகா!

எஃப் 9 - ஃபாஸ்ட் சாகா

கொரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு எந்த ஹாலிவுட் படமும் சரியாகப் போகவில்லை. உருப்படியான ஒரேயொரு ஹிட் என்றால் தி கொயட் பிளேஸ் 2 மட்டுமே.

  • Share this:
    யுஎஸ்ஸில் திரையரங்குகள் முழுமையாக திறந்துள்ளன. கொரோனா அச்சுறுத்தலைத் தாண்டி மக்கள் திரையரங்குகளுக்கு வர ஆரம்பித்துள்ளனர். சென்ற வார இறுதியில் எஃப் 9 : பாஸ்ட் சாகா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

    1. F9

    வின் டீசலும், ட்வைனி ஜான்சனும் அதகளம் செய்த பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் சீரிஸின் ஒன்பதாவது படம் இது. இதில் ட்வைனி ஜான்சனுக்குப் பதில் ஜான் சேனா. இந்த சீரிஸில் ஏற்கனவே 4 படங்களை இயக்கியிருக்கும் ஜஸ்டின் லின் இந்த ஒன்பதாவது பாகத்தை இயக்கியுள்ளார். சீனா உள்பட பல நாடுகளில் சென்ற மாதமே வெளியான இப்படம் யுஎஸ்ஸில் சென்ற வாரம் 4,179 திரையரங்குகளில் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் யுஎஸ் வசூல் 70 மில்லியன் டாலர்கள் (சுமார் 530 கோடிகளுக்கும் மேல்)

    2. A Quiet Place Part II

    ஏ கொயட் பிளேஸின் இரண்டாம் பாகம். சென்ற வார இறுதியில் இப்படம் சுமார் 6.2 மில்லியன் டாலர்களை வசூலித்தது. கடந்த ஞாயிறு, 5 வாரங்கள் முடிவில் இதன் யுஎஸ் வசூல் 136.4 மில்லியன் டாலர்கள். அதாவது ஆயிரம் கோடிகளைத் தாண்டி இப்படம் யுஎஸ்ஸில் வசூலித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    3. Hitman's Wife's Bodyguard

    சாமுவெல் ஜாக்சன், ரேயன் ரெனால்ட்ஸ் நடிப்பில் வெளியான ஹிட்மேன்ஸ் பாடிகார்ட் படத்தின் இரண்டாம் பாகம் இது. அவர்களே நடித்துள்ளனர். சாமுவெல் ஜாக்சனின் மனைவியாக வருகிறவர் சல்மா ஹெய்க். முதல் பாகத்திலேயே அசரடித்தார். சென்ற வாரத்துக்கு முந்தைய வாரம் வெளியான இப்படம் சென்ற வார இறுதியில் 4.9 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. ஞாயிறுவரை இதன் யுஎஸ் வசூல் 25.9 மில்லியன் டாலர்கள். குறைவுதான்.

    4. Peter Rabbit 2: The Runaway

    பொதுவாக அனிமேஷன் படங்கள் யுஎஸ்ஸில் வசூலை அள்ளும். இந்தப் படம் என்னவோ நொண்டியடிக்கிறது. மூன்று வாரங்கள் முன்பு வெளியான படம் சென்ற வார இறுதியில் 4.9 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. ஞாயிறுவரை இதன் யுஎஸ் வசூல் 28.9 மில்லியன் டாலர்கள்.

    5. Cruella

    எம்மா ஸ்டோனும், எம்மா தாம்ஸனும் நடித்திருக்கும் படம். வெளியாகி ஐந்து வாரங்களாகிறது. சென்ற வார இறுதியில் 3.7 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. ஞாயிறுவரையான யுஎஸ் வசூல் 71.3 மில்லியன் டாலர்கள். உலக அளவில் இதுவரை 183.80 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. படத்தின் பட்ஜெட் சுமார் 200 மில்லியன் டாலர்கள். முதலுக்கே மோசமாகும் நிலையில்தான் உள்ளது கலெக்ஷன்.

    கொரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு எந்த ஹாலிவுட் படமும் சரியாகப் போகவில்லை. உருப்படியான ஒரேயொரு ஹிட் என்றால் தி கொயட் பிளேஸ் 2 மட்டுமே. நம்மூரில் மாஸ்டர் வெளியாகி சுல்தான், கர்ணன் வெற்றிக்கு வழி செய்தது போல், ஏதாவது சூப்பர்ஹீரோ படம் வெளியானால்தான் யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் வெளிச்சம் வரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: