• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - ஜேம்ஸ்பாண்டை பின்னுக்கு தள்ளிய Halloween Kills

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - ஜேம்ஸ்பாண்டை பின்னுக்கு தள்ளிய Halloween Kills

ஹாலோவீன் கில்ஸ்

ஹாலோவீன் கில்ஸ்

சென்ற வார யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் ஜேம்ஸ்பாண்ட் படமான நோ டைம் டூ டை இரண்டாம் இடத்துக்கு கீழிறங்கியுள்ளது.

  • Share this:
    யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ், இந்தியன் பாக்ஸ் ஆபிஸைவிட முற்றிலும் மாறுபட்டது. இங்கே இந்தியாவில் முன்னணி நடிகர்களின் படங்களே டாப் 10-ல் இடம்பெறும். அங்கு வேறு மாதிரி. டாம் க்ரூஸ் போன்ற ஆக்ஷன் ஹீரோக்களின் படங்களை குழந்தைகளுக்கான அனிமேஷன் படங்கள் ஊதித்தள்ளும். அதேபோல் சின்ன பட்ஜெட்டில் தயாராகும் பேய் படங்கள்.

    சென்ற வார யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் ஜேம்ஸ்பாண்ட் படமான நோ டைம் டூ டை இரண்டாம் இடத்துக்கு கீழிறங்கியுள்ளது. சென்றவார இறுதியில் அதன் யுஎஸ் வசூல் 24.3 மில்லியன் டாலர்கள். முதலிடத்தைப் பிடித்திருப்பது ஹாலோவீன் கில்ஸ் திரைப்படம். சென்றவாரம் வெளியான இப்படம் 50.4 மில்லியன் டாலர்கள் வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. 16.5 மில்லியன் டாலர்கள் வசூலித்து வெனம் - லெட் தேர் பி கார்னேஜ் மூன்றாவது இடத்தில் உள்ளது.

    ஹாலோவீன் கில்ஸ் திரைப்படம் 2018-ல் வெளியான ஹாலோவீன் படத்தின் இரண்டாம் பாகம். ரத்தம் தெறிக்கும் கொலைகள் நிறைந்தது. முதல்பாகத்தை விட இரண்டாவதில் கொலையும், வன்முறையும் அதிகம். டேவிட் கார்டன் கிரீன் இவ்விரு படங்களையும் இயக்கி, தயாரித்திருந்தார். ரத்தமும், கொலையும் அதிகரிக்கையில் வசூலும் அதிகரிக்கும் என்பதால், ஹாலோவீன் சீரிஸை அவர் இப்போதைக்கு விடுவதாக இல்லை. அடுத்த வருடம் ஹாலோவீன் என்ட்ஸ் வெளிவருகிறது. இந்த மூன்றாவது பாகத்துடன் ஹாலோவீன் கொலைகளை அவர் முடித்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் இந்த மாதம் 22-ஆம் தேதி ஹாலோவீன் கில்ஸ் வெளியாகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: