அஜித் படத்தில் நடிக்காதது ஏன்? பிரபல பாலிவுட் நடிகை பதில்

அஜித் படத்தில் நடிக்காதது ஏன்? பிரபல பாலிவுட் நடிகை பதில்
ஊர்வசி | அஜித்
  • News18
  • Last Updated: September 24, 2019, 11:47 AM IST
  • Share this:
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க முடியாததற்கான காரணத்தை கூறியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டிலே.

அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி ஹிட் அடித்த படம் பிங்க். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது. அஜித் வழக்கறிஞராக நடித்திருந்த இந்தப் படத்தில் வித்யாபாலன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

பிங்க் படத்தில் இடம்பெறாத வித்யாபாலனின் கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டிலேவிடம் போனி கபூர் பேசியதாக ஊர்வசி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
மேலும் அந்த பேட்டியில் ஊர்வசி கூறுகையில், “நான் போனிகபூருடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்ற இருந்தோம். ஆனால் நான் வேறு சில படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால் அந்தப் படத்துக்கு என்னால் தேதிகள் கொடுக்க முடியவில்லை. இதனால் அஜித்துடன் நடிக்க முடியாமல் போனது” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: திரைப்பட விழாவில் வண்ண உடையில் ஜொலித்த நாயகிகள்
First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading