முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / உன்னால் எல்லாம் நான் அசிங்கப்பட மாட்டேன் - ரிஷப் பண்டிற்கு பதிலளித்த லெஜெண்ட் பட நாயகி

உன்னால் எல்லாம் நான் அசிங்கப்பட மாட்டேன் - ரிஷப் பண்டிற்கு பதிலளித்த லெஜெண்ட் பட நாயகி

ஊர்வசி ரவுடேலா - ரிஷன் பண்ட்

ஊர்வசி ரவுடேலா - ரிஷன் பண்ட்

”சிறியவர்கள் போய் கிரிகெட் விளையாட வேண்டும். உன் போன்ற சிறியவர்களால் எல்லாம் நான் அசிங்கப்பட மாட்டேன்” என லெஜண்ட் பட நாயகி ரிஷப் பண்டிற்கு பதிலாக பதிவிட்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய கிரிகெட் வீரர் ரிஷப் பண்ட்ற்கு லெஜண்ட் பட நாயகி ஊர்வசி ரவுடேலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடன் விளையாட வேண்டாம் என பதிலளித்துள்ளார். இருவருக்கும் இருக்கும் இந்த விவகாரத்தில் மேலும் ஒரு சம்பவம் வலு சேர்த்துள்ளது.

இந்த விவகாரம் நடிகை ஊர்வசி ரவுடேலா கொடுத்த ஒரு பேட்டியின் மூலம் ஆராம்பித்தது. அவர் கொடுத்த ஒரு பேட்டியில், “நான் காசியில் படபிடிப்பை முடித்துக்கொண்டு டெல்லிக்கு வந்து 10 மணி நேரம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அதனால் சோர்வுற்றதால், உறங்க சென்றுவிட்டேன். அந்த நேரத்தில் Mr.RP எனக்காக வந்து காத்திருக்கிறார். எனக்கு 16 முறை அவர் அழைத்திருப்பதை நான் பின்பு தான் பார்த்தேன்” என கூறியிருந்தார்.

இந்த பேட்டி வைரலான பிறகு, கிரிகெட் வீரர் ரிஷப் பண்ட், இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மக்கள் அற்ப புகழ்ச்சிக்கும், தலைப்பு செய்தியில் இடம் பிடிப்பதற்கும், நேர்காணலில் எவ்வளவு பொய் சொல்கிறார்கள் என பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கிறது. பெயருக்காகவும் புகழுக்காகவும் அவர்கள் மிகவும் ஏங்கி கிடக்கிறார்கள். கடவுள் அவர்களை ஆசிர்வதிக்கட்டும்” என பதிவிட்டு இருந்தார். இதை சற்று நேரத்தில் நீக்கவும் செய்தார்.

தற்போது நடிகை ஊர்வசி ரவுடேலாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர், “சிறியவர்கள் போய் கிரிகெட் விளையாட வேண்டும். உன் போன்ற சிறியவர்களால் எல்லாம் நான் அசிங்கப்பட மாட்டேன்” என எழுதியுள்ளார்.

ரிஷப் பண்ட் நீக்கியதை போல ஊர்வசி ரவுடேலா தனது பதிவை நீக்கவில்லை. அந்த பதிவிற்கு ரசிகர்கள், ரிஷப் பண்டை வம்பிழுக்க வேண்டாம் என நகைச்சுவையாக கம்மெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் தற்போது தவிர்க்க முடியாத வீரராக உள்ளார். வரவிருக்கும் ஆசிய கோப்பைக்கும் டி20 உலக கோப்பைக்கும் அதிரடியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இவரின் பங்கு முக்கியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

First published:

Tags: Actress urvashi, Rishabh pant