லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருளுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை?

ஊர்வசி - அருள்

பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

 • Share this:
  லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் அருள் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  தனது கடையின் விளம்பரங்களில் தானே நடித்து, மக்கள் மனதில் இடம் பிடித்தார் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் அருள். தற்போது தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். அந்தப் படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். சரவணா ஸ்டோர்ஸ் அருள் நடிக்கும் இந்தப் படத்தில், பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

  பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருளுக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராண்ட் மஸ்தி, ஹேட் ஸ்டோரி 4 போன்ற இந்தி திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்ற ஊர்வசி, இந்த படத்தில் ஐ.ஐ.டி-யில் படித்த மைக்ரோபயாலஜிஸ்டாக நடிக்கிறாராம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: