நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஆயிரக்கணக்கில் செலவு செய்து மண் குளியல் எடுத்துக் கொண்ட படம் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் படத்தில் ஹீரோவாக நடிப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்தப் படத்தில் ஹீரோயினாக நடிப்பவர் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. பெயரிடப்படாத அந்தப் படத்தை இரட்டை இயக்குநர்களான ஜேடி- ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் அஜித் நடித்த உல்லாசம் படத்தை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பட்ஜெட் மட்டும் 30 இந்த என்று கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு ஊர்வசியும், லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருளும் டூயட் பாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் தற்போது ஊர்வசி மண் குளியல் (மட் பாத்) எடுத்திருக்கிறார். உடல் முழுவதும் மண்ணை பூசி, கண்களை மூடிக் கொண்டிருக்கும் அந்தப் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். ஊர்வசி ரவுத்தேலாவின் அந்தப் படம் சமூக வலைதளங்களில் தற்போது
வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மண் குளியலில் நிறைய பயன்கள் உள்ளன. அதில் முக்கியமாக, உடலைக் குளிர்வித்து, நச்சுத்தன்மையை நீர்க்கச்செய்து உறிஞ்சி வெளியே எடுத்துவிடும். பசியின்மை, மனஉளைச்சலால் ஏற்படும் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள் போன்றவற்றுக்கும் இந்தச் சிகிச்சை பயன்படும்.
ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். உடலில் உள்ள பி.ஹெச் அளவை சமன் செய்யும். சுத்தம் செய்யப்பட்ட மண்ணை 30 நிமிடம் வரை வைத்திருந்து பயன்படுத்தினால் தோலின் அழுக்குகள் நீங்கி பளபளப்பாகும். மண்ணை முகத்தில் பூசி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் சுத்தமாகக் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையங்களைச் சரிசெய்யவும் பயன்படும். கண்களின்மீது பயன்படுத்தினால் கண் படலம், அழற்சி, அரிப்பு, ஒவ்வாமை, விழிநீர் அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்