• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திருட்டுப் பயலே 2 இந்தி ரீமேக்கில் நடிக்கும் ஊர்வசி ரவுத்லா...!

திருட்டுப் பயலே 2 இந்தி ரீமேக்கில் நடிக்கும் ஊர்வசி ரவுத்லா...!

ஊர்வசி ரவுத்லா

ஊர்வசி ரவுத்லா

வினித் குமார் சிங், அக்ஷய் ஓபராய், ஊர்வசி ரவுத்லா ஆகியோருடன் சீதாவும் நடிக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சுசி.கணேசன் தனது திருட்டுப் பயலே 2 படத்தை இந்தியில் தில் ஹே க்ரே என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். 

மணிரத்னத்தின் உதவி இயக்குனரான சுசி.கணேசன், மணிரத்னம் தயாரித்த பைவ் ஸ்டார் படத்தின் மூலம் இயக்குனரானார். அந்தப் படத்தில் அறிமுகமானவர்கள்தான் பிரசன்னா, கனிகா போன்றவர்கள். சுசி.கணேசனின் விரும்புகிறேனில் அறிமுகமானவர் சினேகா. சுசி.கணேசனின் கந்தசாமி படத்தை பிரபல விமர்சகரும், பத்திரிகையாளருமான ஞாநி கடுமையாக விமர்சிக்க, சுசி.கணேசன் வார்த்தைகளில் திருப்பித்தாக்க, இந்த விவகாரம் சர்ச்சையானது. அத்துடன் நிற்கவில்லை.

கவிஞரும், இயக்குனருமான லீனா மணிமேகலையுடன் சுசி.கணேசனுக்கு தகராறானது. சுசி.கணேசன் போட்ட வழக்கின் காரணமாக லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட் தற்போதுவரை முடக்கப்பட்டுள்ளது.

நிற்க. நம் விஷயத்துக்கு வருவோம். கந்தசாமிக்குப் பின் இந்தியில் தனது திருட்டுப் பயலே படத்தை ரீமேக் செய்தார் சுசி.கணேசன். படம் பரவலான கவனத்தை பெற்றது. இந்தியில் அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் தமிழில் திருட்டுப் பயலே 2 படத்தை எடுத்தார். பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலா பால் நடித்திருந்த இந்தப் படம் பரவலான வரவேற்பை பெற்றது. இப்போது இந்தப் படத்தை இந்தியில், தில் ஹே க்ரே என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்

Also read... விமர்சனங்களை கடந்து லாபத்தை தந்த அரண்மனை 3...!

வினித் குமார் சிங், அக்ஷய் ஓபராய், ஊர்வசி ரவுத்லா ஆகியோருடன் சீதாவும் நடிக்கிறார். சீதா ஊர்வசி ரவுத்லாவின் அம்மாவாக நடிப்பதாக கூறப்படுகிறது. இது சீதா நடிக்கும் முதல் இந்திப் படமாகும்கர்நாடகாவைச் சேர்ந்த ரமேஷ் ரெட்டியின் சுராஜ் புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: