முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கேஜிஎப் படத்தை மிஞ்சுமா? தெறிக்கும் ரத்தம்.. ரூ.50 கோடி பட்ஜெட்.. பட்டையைக் கிளப்பும் கப்ஜா!

கேஜிஎப் படத்தை மிஞ்சுமா? தெறிக்கும் ரத்தம்.. ரூ.50 கோடி பட்ஜெட்.. பட்டையைக் கிளப்பும் கப்ஜா!

கப்ஜா டிரைலர்

கப்ஜா டிரைலர்

படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது கப்ஜா படத்தின் ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் சுதீப்பின் கப்ஜா டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் கிச்சா சுதீப் மற்றும் உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் கப்ஜா. இந்தப் படத்தில் நடிகை ஷ்ரேயா சரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் இப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படம் சுமார் 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கப்ஜா படத்தை ஆர்.சந்துரு தயாரித்து, எழுதி, இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு கேஜிஎப் படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சந்துரு, “இது என்னுடைய கனவு திரைப்படம். கொரோனா கால கட்டத்தில் கூட நாங்கள் படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தோம். எல்கேஜி முதல் யுகேஜி வரை நான் முதல் ரேங்க் தான் எடுத்தேன். பிறகு 8-ம் வகுப்பு வரை கடைசி ரேங்க் தான் எடுத்தேன். எனக்கு படிப்பு சரியாக வரவில்லை, எனவே சினிமா மீது கவனம் செலுத்தினேன். எனக்கு இது முதல் பான் இந்தியன் படம்” என்றார்.

' isDesktop="true" id="905131" youtubeid="eoTSCitmcBA" category="cinema">

படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது கப்ஜா படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. படம் மார்ச் 17-ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கன்னட சினிமாவின் ஹிட் படமான கேஜிஎப் படத்தை கப்ஜா ஓரம் தள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Tamil Cinema