ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அமேசான் ப்ரைமில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படங்கள்!

அமேசான் ப்ரைமில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படங்கள்!

அல்லு அர்ஜுன் - விக்ரம்

அல்லு அர்ஜுன் - விக்ரம்

விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி முதல் நேரடியாக இணையதளத்தில் வெளியாக உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒடிடி வலை தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் வரும் மாதத்தில் அடுத்தடுத்து அமேசான் ப்ரைம் நிறுவனம் வெளியிட உள்ள திரைப்படங்கள் குறித்து இங்கே பதிவிடுகிறோம்.

அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் அண்மையில் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படம் ஜனவரி 7-ஆம் தேதி அமேசன் பிரைம் வலைதளத்தில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சுகுமார் இயக்கத்தில் டிசம்பர் 17-ஆம் தேதி புஷ்பா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. திரையரங்குகளில் வெளியாகி 20 நாட்கள் கழித்து இந்த திரைப்படம் இணையதளத்தில் வெளியாவது அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாகவும், அவசரப்பட்டு படத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டாம் என்றும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி முதல் நேரடியாக இணையதளத்தில் வெளியாக உள்ளது. அமேசன் பிரைம் வலைதளம் இந்த திரைப்படத்தை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆதித்ய வர்மா திரைப்படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் இந்த திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட நடிகராக துருவ் உருவாக வேண்டும் என தொடர்ந்து உழைத்து வரும் நடிகர் விக்ரம் இந்த திரைப்படத்தில் அவருக்காக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாகுபலி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகர் ராணா டகுபதி நடிப்பில் உருவாகி உள்ள 1945 திரைப்படத்தின் முன்னோட்டத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சத்யசிவா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா நாயகியாக நடித்துள்ளார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த இந்த திரைப்படம் விரைவில் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மர்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படமாக Doctor Strange in the Multiverse of Madness திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான மார்வெல் திரைப்படமான ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படம் உலகம் முழுக்க 10 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டி உள்ள நிலையில் அடுத்ததாக Doctor Strange திரைப்படத்தை களமிறங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மே மாதம் 6-ம் தேதி கோடை விடுமுறையை குறிவைத்து இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல்முறை ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது ஊரடங்கு கதைக்களமாகக் கொண்டு அமேசான் வலை தளத்தில் வெளியான புத்தம் புது காலை என்று படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து புத்தம் புது காலை விடியாதா என்ற பெயரில் மீண்டும் ஒரு வலைபடத்தை அமேசான் நிறுவனம் உருவாக்கியுள்ளது. பாலாஜி மோகன், ஹலிதா சமீம் உள்ளிட்ட ஐந்து இயக்குனர்கள் இணைந்து ஐந்து கதைகளை இந்த வலை படத்திற்காக இயக்கியுள்ளனர். கைதி மாஸ்டர் திரைப்படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ், 96 திரைப்படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்த கௌரி கிஷன், ஜெய்பீம் திரைப்படத்தில் மலைவாழ் கிராமத்து பெண்ணாக நடித்த லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஜனவரி 14ம் தேதி வெளியிட உள்ளதாக அமெசான் திட்டமிட்டுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Shalini C
First published:

Tags: Actress Rashmika Mandanna