திரைத்துறைப் பிரபலங்கள் பலர், எப்பொழுதுமே தங்கள் குடும்பத்தை ஓரளவுக்கு பிரைவேட்டாக வைத்திருப்பார்கள். இதனாலேயே நடிகர் நடிகைகளின் குடும்ப புகைப்படங்கள் குழந்தைகளின் புகைப்படங்கள் வீடியோக்கள் வெளிவராதா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள்.
முழுக்க முழுக்க தனது குடும்பத்தை பிரைவேட்டாக, பொதுவில் வெளிக்காட்டாத நடிகராக இல்லையென்றாலும், சில முக்கிய நிகழ்ச்சிகளைத் தவிர்த்து சிவகார்த்திகேயனின் குடும்பப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அரிது தான். தன் குடும்பம் தான் எல்லாமே என்று பேட்டிகளில் அதிகமாக தன் குடும்பத்தைப் பற்றி பேசுவார் தவிர, அடிக்கடி நிகழ்ச்சிகளில் சிவாவின் மனைவி, மகள் என்று பெரிதாக காணப்பட மாட்டார்கள்.
சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை, மகன் பிறந்துள்ளது. இரண்டாவது குழந்தைக்கு தந்தையின் நினைவாக குகன் தாஸ் என்று சிவகார்த்திகேயன் பெயர் சூட்டியுள்ளார். இந்த விவரங்களை சிவாவே தனது சோஷியல் மீடியா கணக்குகளில் வெளியிட்டார். இரண்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு சில பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்டிய மனைவி ஆர்த்தி, அதன் பிறகு எங்குமே காணப்படவில்லை. தற்போது நீண்ட இடைவேளைக்கு, டான் திரைப்படம் வெளியானதையொட்டி, சிவகார்த்திகேயன் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகை த்ரிஷா சாமி தரிசனம்!
சமீபத்தில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டப் படங்களில் நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படமான டான் அடங்கும். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் டான் திரைப்படம் பெரிதாக ஈர்த்துள்ளது. குழந்தைகளைக் கவர்ந்த மிகச் சில நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். டான் திரைப்படத்தின் மூலம் குடும்பத்தினரையும் கவர்ந்துள்ளார். இந்த திரைப்படத்தில் அப்பா மகன் உறவு எவ்வளவு அழகானது மற்றும் அற்புதமானது என்பதை வெளிகாட்டும் வகையில் நடித்துள்ளார் சிவா. சிவகார்த்திகேயன் இளம் வயதிலேயே அவர் தந்தை இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் தனது மாமா மகளான ஆர்த்தியைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விஜய் டிவியில் ஆங்கராக பணியாற்றி கொண்டிருந்த காலத்திலேயே திரைத்துறையில் காலடி வைக்கும் ஆரம்ப காலத்திலேயே திருமணம் செய்து கொண்டு விட்டார். விஜய் டிவியின் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தம்பதி அதற்கு பிறகு ஒரு சில பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்டனர். சிவா ஆர்த்தி தம்பதிக்கு ஆராதனா என்ற ஒரு மகள் இருக்கிறார்.
Cannes Film Festival: கேன்ஸ் 2022 பட விழாவில் நயன்தாரா?

மனைவியுடன் சிவகார்த்திகேயன்
கடந்த ஆண்டு வெளியான, சிவாவின் டாக்டர் திரைப்படம், சூப்பர் டூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது டான் திரைப்படம் 100 கோடி வசூலை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. 40 கோடி பட்ஜெட்டில் தயாரான டான், இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக ரசிகர்களை சந்தித்தார் சிவா. அப்போது தன் மனைவியுடன் சேர்ந்து ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.