Home /News /entertainment /

திரைக்கதை மேதை பாக்யராஜின் என் ரத்தத்தின் ரத்தமே படத்தின் அறியப்படாத தகவல்கள்!

திரைக்கதை மேதை பாக்யராஜின் என் ரத்தத்தின் ரத்தமே படத்தின் அறியப்படாத தகவல்கள்!

பாக்யராஜ்

பாக்யராஜ்

என் ரத்தத்தின் ரத்தமே படத்துடன் கமலின் அபூர்வ சகோதரர்கள், பார்த்திபனின் புதிய பாதை படங்கள் வெளியாகின. இவ்விரு படங்களின் வெற்றி என் ரத்தத்தின் ரத்தமேயை வாஷ்அவுட்டாக்கியது.

இன்றும் தமிழில் திரைக்கதை மேதை என்றால் கே.பாக்யராஜ் தான். எளிமையான கதைகளை தனது திரைக்கதையால் வெள்ளிவிழா படங்களாக்கிய பாக்யராஜ், இந்தியில் பிளாக்பஸ்டர் ஹிட்டான படத்தை தமிழில் மகத்தான தோல்விப் படமாக ரீமேக் செய்தார் என்றால் நம்ப முடிகிறதா? 33 வருடங்களுக்கு முன் இதே ஏப்ரல் மாதத்தில் அந்த மகத்தான நிகழ்வு நடந்தது.

1989 ஏப்ரல் 14-ஆம் தேதி பாக்யராஜ் நடித்த என் ரத்தத்தின் ரத்தமே வெளியானது. என் ரத்தத்தின் ரத்தமே என்பது எம்ஜிஆர் தனது கட்சித் தொண்டர்களை அழைக்கும் புகழ்பெற்ற வாக்கியம். அந்த வாக்கியத்தைச் சொன்னாலே கரவொலி கிளம்பும். பாக்யராஜ் எம்ஜிஆரால், என்னுடைய கலைவாரிசு என முன்மொழியப்பட்டவர். இந்த இரண்டும் இணைகையில் எப்படியொரு வரவேற்பு கிடைத்திருக்க வேண்டும். இத்தனைக்கும் இந்தப் படம் இரண்டு வருடங்கள் முன் இந்தியில் பிளாக் பஸ்டர் ஹிட்டான மிஸ்டர் இந்தியா படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்.

1983-ல் சேகர் கபூர் இயக்கிய மஸும் திரைப்படத்தால் கவரப்பட்ட போனி கபூர், குழந்தைகளுக்குப் பிடிக்கும் ஒரு திரைப்படத்தை தனக்கு இயக்கித்தர வேண்டும் என சேகர் கபூரிடம் கேட்கிறார். அவரும் ஒத்துக் கொள்கிறார். பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸும் சேகர் கபூருக்கு தரப்படுகிறது. காமிக்ஸ்களில் நாட்டமுடைய சேகர் கபூர், கதை எழுதும் பொறுப்பை அப்போதைய திரைக்கதை ஜாம்பவான்கள் சலீம் - ஜாவத்திடம் தருகிறார். இவர்கள் 1971 - 1989 வரை 22 இந்திப் படங்களுக்கும், 2 கன்னடப் படங்களுக்கும் திரைக்கதை எழுதினார்கள். கோபக்கார இளைஞன் என்ற எவர்கிரீன் வணிக சினிமா நாயகனை உருவாக்கியவர்கள் இவர்கள் தான். அமிதாப்பச்சன் என்ற நடிகரும், அவர் வழியாக ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டாரும் உருவாக இவர்களின் திரைக்கதை முக்கிய காரணமாகும். இதில் சலீம் (சலீம் கான்) நடிகர் சல்மான் கானின் தந்தை. ஜாவத் (ஜாவத் அக்தர்) நடிகை சோயா அக்தர், இயக்குனர், நடிகர் ஃபர்கான் அக்தர் ஆகியோரின் தந்தை.

1987-ல் சலீம் - ஜாவத் மிஸ்டர் இந்தியா படத்தின் திரைக்கதையை எழுதி முடிக்கிறார்கள். அவர்கள் அதன் நாயகனை ராஜேஷ் கன்னாவை மனதில் வைத்து எழுதியிருந்தனர். அவரால் அதில் நடிக்க முடியாமல் போக, அமிதாப் பச்சனை அணுகினார்கள். பாதி நேரம் கண்ணுக்கு தெரியாதவராக வரும் நாயகனாக நடிக்க விருப்பமில்லை என்று அவர் நடிக்க மறுக்க, அதனை அவமானமாக கருதிய ஜாவத் அக்தர், நானோ, இல்லை சலீமோ இனி உங்க படத்தில் பணிபுரிய மாட்டோம் என அமிதாப்பின் முகத்துக்கு நேராகவே கூறியிருக்கிறார். இந்த விஷயத்தில் சலீம் கான் முரண்பட, 16 வருடங்களாக ஒன்றாக திரைக்கதை எழுதி வந்த சலீம் - ஜாவத் கூட்டணி பிரிந்தது. மிஸ்டர் இந்தியாவுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் இணையவில்லை.

Unknown details of K Bhagyaraj En Rathathin Rathame, en rathathin rathame mp3 song download, rathathin rathame lyrics in tamil, rathathin rathame song ringtone download masstamilan, jithan bhagyaraj wife, baki raj, bhagyaraj screenplay, என் ரத்தத்தின் ரத்தமே, பாக்யராஜ் ரத்தத்தின் ரத்தமே

இப்படி பல பூகம்பங்களை தன்னகத்தே கொண்டிருந்த மிஸ்டர் இந்தியாவில் கடைசியில் போனி கபூரின் தம்பி அனில் கபூர் நாயகனானார். வில்லன் அம்ப்ரீஷ் பூரி. நாயகியாக ஸ்ரீதேவியை நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக சென்னை வந்து அவரை ஒப்பந்தம் செய்தார் போனி கபூர். தமிழ்ப் படங்களின் மூலம் ஏற்கனவே அவர் ஸ்ரீதேவியின் ரசிகராயிருந்தார். ஸ்ரீதேவி எட்டு லட்சம் சம்பளம் கேட்க, அவரது தாயார் பத்து லட்சம் கேட்க, போனி கபூர் தனது வருங்கால மனைவிக்கு 11 லட்சங்கள் தந்து ஒப்பந்தம் செய்தார். ஹீரோ அனில் கபூருக்கு சம்பளம் இதைவிட குறைவு. திரைக்கதை எழுதிய சலீம் - ஜாவத்தின் சம்பளம் எழுபதாயிரம் ரூபாய்.

Unknown details of K Bhagyaraj En Rathathin Rathame, en rathathin rathame mp3 song download, rathathin rathame lyrics in tamil, rathathin rathame song ringtone download masstamilan, jithan bhagyaraj wife, baki raj, bhagyaraj screenplay, என் ரத்தத்தின் ரத்தமே, பாக்யராஜ் ரத்தத்தின் ரத்தமே

சிவகார்த்திகேயனின் டான் படத்தின் உரிமையை வாங்கிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

மிஸ்டர் இந்தியா வெளியாகி அதுவரையான இந்திப் படங்களின் பல சாதனைகளை உடைத்தது. லக்ஷ்மிலால் பியாரிலாலின் இசையும், பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாயின. இந்தப் படத்தை தமிழில் ரஜினியை வைத்து தயாரிக்க பாலாஜி திட்டமிட்டிருந்தார். அவரை முந்திக் கொண்டு ரீமேக் உரிமையை பெற்ற பாக்யராஜ், கே.விஜயனை இயக்குனராக்கி என் ரத்தத்தின் ரத்தமே பெயரில் படத்தை தொடங்கினார். தயாரிப்பு சுஜாதா சினி ஆர்ட்ஸ் கிருஷ்ணமூர்த்தி பாலாஜி. கே.விஜயன் சிவாஜியின் பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர். முக்கியமாக 1979-ல் அவர் இயக்கிய திரிசூலம் அதுவரையான தமிழ் சினிமாவின் வசூல் சாதனையை முறியடித்திருந்தது. பத்து வருடங்கள் கழித்து 1989-ல் என் ரத்தத்தின் ரத்தமே மூலம் மீண்டும் அப்படியொரு சாதனையை புரிவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், படப்பிடிப்பு முடியும் முன்பே கே.விஜயன்  மரணமடைந்தார். பிறகு அவரது மகனும் இயக்குனருமான சுந்தர் கே.விஜயன் படத்தை பூர்த்தி செய்தார்.

Happy Birthday Parvathy: மிஸ் பண்ணக் கூடாத பார்வதியின் 5 படங்கள்!

பிரமாண்ட அரங்குகள், இந்தியிலிருந்து வரவழைத்த மீனாட்சி சேஷாத்ரி என பலதும் என் ரத்தத்தின் ரத்தமேயில் இருந்தது. சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார். 1989 ஏப்ரல் 14 படம் வெளியானது. யாரும் எதிர்பார்க்காத வகையில் படம் படுதோல்வியடைந்தது. படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. சங்கர் கணேஷின் பாடல்கள் நன்றாக இருந்தாலும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என எண்ண வைத்தன. இன்னொரு முக்கிய விஷயம், என் ரத்தத்தின் ரத்தமே படத்துடன் கமலின் அபூர்வ சகோதரர்கள், பார்த்திபனின் புதிய பாதை படங்கள் வெளியாகின. இவ்விரு படங்களின் வெற்றி என் ரத்தத்தின் ரத்தமேயை வாஷ் அவுட்டாக்கியது.

Unknown details of K Bhagyaraj En Rathathin Rathame, en rathathin rathame mp3 song download, rathathin rathame lyrics in tamil, rathathin rathame song ringtone download masstamilan, jithan bhagyaraj wife, baki raj, bhagyaraj screenplay, என் ரத்தத்தின் ரத்தமே, பாக்யராஜ் ரத்தத்தின் ரத்தமே

பத்திரிகைகளும் என் ரத்தத்தின் ரத்தமே படத்தின் மீது கருணை காட்டவில்லை. 'இன்னாங்கடா, அல்லாரையும் இஸ்கூல் கொயந்திங்கன்னு நெனைச்சிக்கினாங்களா? என்னுமோ பயாஸ்கோப் காட்றானுங்க...? படம் முடிந்து வெளியே வரும்போது யாரோ இப்படி ஒலிபரப்பிக் கொண்டு போனதை கேட்டேன். குழந்தை கதை இருக்கலாம், தப்பில்லை. அதிலே பெரியவர்கள் விவகாரத்தை கலந்தால் இப்படித்தான் பிசிறடித்துப்போய் எரிச்சல் மூட்டும். தெரியாமல்தான் கேட்கிறேன். இந்த மாயாவி கதையில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர், விஞ்ஞானி ஜி.டி.நாயடு இவர்களையெல்லாம் இழுத்துவிடுவானேன்? அவர்களுடைய இமேஜை தூக்குவதாக நினைத்து கேலிக்கு ஆளாக்குவானேன்?' என்று பிரபல பத்திரிகை ஒன்று விமர்சனம் எழுதியது.

ஆல்யா மானசா தனது மகனை முதன்முறையாக கைகளில் வாங்கிய தருணம் - வைரலாகும் வீடியோ!

படத்தின் தோல்வி பாக்யராஜை துவளச்செய்யவில்லை. அவர் அந்த வருடமே பானுப்ரியாவை வைத்து ஆராரோ ஆரிராரோ படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்து வெளியிட்டார். படம் ஹிட்டானது. சில நேரம் வெற்றியைவிட தோல்விக்குப் பின்னாலுள்ள சரித்திரம் முக்கியமானது. அப்படியொரு படம்தான் என் ரத்தத்தின் ரத்தமே.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Director Bhagyaraj

அடுத்த செய்தி