ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை பாராட்டிய மத்திய அமைச்சர்…

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை பாராட்டிய மத்திய அமைச்சர்…

மாமனிதன் பட இயக்குனர் சீனு ராமசாமியுடன் மத்திய அமைச்சர் எல்.முருகன்

மாமனிதன் பட இயக்குனர் சீனு ராமசாமியுடன் மத்திய அமைச்சர் எல்.முருகன்

மனிதத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திரைப்படம் மாமனிதன்..! என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மாமனிதன் படத்தை பார்த்து விட்டு மத்திய அமைச்சர் எல். முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுபோன்ற படைப்புகள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.

  விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி முக்கிய வேடங்களில் நடித்த, சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் தொடர்ந்து விருதுகளை வென்று வருகிறது. புனேவில் நடந்த, கிரேட் மெசேஜ் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2022 விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான சான்றிதழை பெற்றுள்ளது.

  இந்தப் படம் சமீபத்தில் இந்தோ பிரெஞ்ச் சர்வதேச திரைப்பட விழா மற்றும் டோக்கியோ திரைப்பட விழாக்களில் விருதுகளைப் வென்றது. அதோடு முன்னணி இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தை பாராட்டியிருந்தார். ”இது ஒரு ‘யதார்த்தமான கிளாசிக்’ என்றும், படத்தில் விஜய் சேதுபதி தனது அற்புதமான நடிப்பிற்காக தேசிய விருதுக்கு தகுதியானவர்” என்றும் கூறியிருந்தார் ஷங்கர்.

  ‘மிகப்பெரும் பரிசை அளித்த ரசிகர்களுக்கு நன்றி’ – யசோதா படம் குறித்து நடிகை சமந்தா உருக்கமான பதிவு…

  மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடித்திருந்தார். தனது குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை கொடுக்கும் முயற்சிகளில், ஒரு ரியல் எஸ்டேட் டெவலப்பருடன் மாட்டிக் கொள்கிறார். பின்னர் அதிலிருந்து வெளிவர அவர் சந்திக்கும் போராட்டங்களே படத்தின் கதைக்களமாக அமைந்தது.

  மோனிகா, ஓ மை டார்லிங்கை குடும்பத்துடன் பார்க்கலாமா?

  இதில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களில் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடித்த, காயத்ரி கதாநாயகியாக நடித்திருந்தார். படத்திற்கு அப்பா-மகன் கூட்டணியாக இளையராஜா மற்றும் யுவன் சங்கரராஜா இசையமைத்திருந்தனர்.

  இந்த நிலையில், மாமனிதன் படத்தை பார்த்து விட்டு மத்திய மீன்வளத்துறை இணையமைச்சரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான எல். முருகன் பாராட்டியுள்ளார்.

  இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘மனிதத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திரைப்படம் மாமனிதன்..!  இப்படத்துக்கு சர்வதேச விருதுகள் மற்றும் மக்கள் அளித்த வெற்றி என உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

  ' isDesktop="true" id="840429" youtubeid="I_35TtG1M_U" category="cinema">

  மேலும் இது போன்ற படைப்புகளை உருவாக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.’ என்று கூறியுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Vijay Sethupathi