சமந்தா குடும்பத்துக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு - போலீஸ் தீவிர விசாரணை!

news18
Updated: September 19, 2019, 5:11 PM IST
சமந்தா குடும்பத்துக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு - போலீஸ் தீவிர விசாரணை!
சமந்தா
news18
Updated: September 19, 2019, 5:11 PM IST
பிரபல நடிகர் நாகர்ஜூனாவுக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் உள்ள பாப்பிரெட்டிகுடா என்ற கிராமத்தில் நடிகர் நாகர்ஜூனாவுக்குச் சொந்தமாக 40 ஏக்கர் பரப்பளவுள்ள பண்ணை வீடு உள்ளது. இந்தப் பண்ணை வீடு நீண்டகாலமாக பயன்பாட்டில் இல்லை.

நேற்று இந்த வீட்டை பணியாளர்கள் சுத்தம் செய்துள்ளனர். அப்போது குறிப்பிட்ட பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசவே பணியாளர்கள் அப்பகுதியை சோதனை செய்து பார்த்தபோது அங்கு அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் அருகிலுள்ள கேஷாம்பேட் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.


இதையடுத்து மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சந்தேகத்துக்குரிய மரணமாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செப்டம்பர் மாதத்தின் முதல்வாரத்தில் நடிகர் நாகர்ஜூனா இந்த பண்ணை வீட்டுக்கு சென்று வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்மதடு படத்துக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் நடிகர் நாகர்ஜூனா தனது 60-வது பிறந்தநாளை ஸ்பெயினில் கொண்டாடினார். அவருடன் அவரது மனைவி அமலா, மகன் நாகசைதன்யா, மருமகள் சமந்தா ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

Loading...

வீடியோ பார்க்க: கோவிலில் பூஜை செய்யும் திருநங்கை

First published: September 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...