சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்றுள்ள உள்ளம் உருகுதைய்யா பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்திற்குப் பிறகு, மீண்டும் சன் பிக்சர்ஸுடன் இணைந்த இயக்குநர் பாண்டிராஜ், எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கினார். சூர்யா நடித்திருந்த இந்தப் படமும் பாண்டிராஜின் நம்ம வீட்டுப் பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் படங்களைப் போன்ற கிராமத்துப் பிண்ணனியில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தைச் சொல்லும் படமாகவும், பெண்களுக்கு நேரும் சமூக கொடுமைகளை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் சொல்லப்பட்டிருந்தது.
பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்திருந்த இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ரியாக்ஷன்களால் ரசிகர்களை கவரும் எக்ஸ்பிரஷன்ஸ் குயின் ராஷ்மிகா மந்தனா!
படத்திற்கு இசை டி.இமான். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. குறிப்பாக ‘உள்ளம் உருகுதய்யா உன்னை உத்து உத்துப் பார்க்கயில’ என்ற பாடல் யுகபாரதி வரிகளில் இடம்பெற்றிருந்தது. ‘உள்ளம் உருகுதய்யா முருகா’ பாடலையே ரீமிக்ஸ் செய்தது போல் இருக்கும் இந்தப் பாடலை பிரதீப் குமார், வந்தனா ஸ்ரீனிவாசன், பிருந்தா மாணிக்கவாசகன் ஆகியோர் பாடியிருந்தனர்.
ஆல்யா மானசா தனது மகனை முதன்முறையாக கைகளில் வாங்கிய தருணம் - வைரலாகும் வீடியோ!
ஆடியோவாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்த இந்தப் பாடலின் வீடியோ தற்போது யூ-ட்யூபில் வெளியாகியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.