ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் சூப்பர் கூட்டணி! 35 ஆண்டுகளுக்கு பின் மணிரத்னத்துடன் இணையும் கமல்ஹாசன்! சூப்பர் அப்டேட்!

மீண்டும் சூப்பர் கூட்டணி! 35 ஆண்டுகளுக்கு பின் மணிரத்னத்துடன் இணையும் கமல்ஹாசன்! சூப்பர் அப்டேட்!

கமல் - மணிரத்னம்

கமல் - மணிரத்னம்

முன்னதாக இந்தியன் 2 படத்தை தொடர்ந்து மலையாளத்தில் முன்னணி இயக்குனராக உள்ள மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளிவந்தன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் கமல் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக மணி ரத்னத்துடன் இணையவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

  கமல்ஹாசனின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. அந்த திரைப்படத்தை கமல்ஹாசனுடைய ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தியன்-2 திரைப்படத்தை முடித்தவுடன் மணி ரத்னம் இயக்கவுள்ள படத்தில் கமல்ஹாசன் இணைய உள்ளார்.

  நடிகர் கமல் தொடர்ந்து வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களுடன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜை தொடர்ந்து மணிரத்னத்துடன் இணைகிறார் கமல்.

  PHOTOS : லைக்ஸை அள்ளும் பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்…

  முன்னதாக இந்தியன் 2 படத்தை தொடர்ந்து மலையாளத்தில் முன்னணி இயக்குனராக உள்ள மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளிவந்தன.

  இந்நிலையில் யாரும் எதிர்பாராத அறிவிப்பாக கமல் மற்றும் மணி ரத்னம் கூட்டணி அறிவிப்பு வெளிவந்துள்ளது.

  இந்தப் படம் கமல் நடிக்கவுள்ள 234-ஆவது படமாகும். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கமலின் ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

  கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் நாயகன் படம் 35 ஆண்டுகளுக்கு முன்பு 1987-ல் வெளியானது.

  ஆறுதல் சொல்ல இவ்வளவு அலப்பறையா? கார் மீது பயணித்த பவன்கல்யாண்.. கொதிக்கும் இணையவாசிகள்!

  இதற்கிடையே இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் 70 சதவீதம் அளவுக்கு நிறைவு பெற்றிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தியன் 2 அடுத்த ஆண்டு அக்டோபரில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Kamal Haasan, Mani rathnam