டிஜிட்டலில் உலகம் சுற்ற வருகிறார் சயின்டிஸ்ட் முருகன்...!

உலகம் சுற்றும் வாலிபன்

எம்ஜிஆர் ரசிகர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்கள். சென்னையை பொறுத்தவரை ஸ்டார், மேகலா போன்று ஒரு டஜன் திரையரங்குகள் எம்ஜிஆர், சிவாஜி படங்களை திரையிடுவதற்கென்றே இருந்தன.

  • News18
  • Last Updated :
  • Share this:
1973 மே 11 ஆம் தேதி எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியானது. பட்ஜெட்டை பொறுத்தவரை அந்த காலத்து எந்திரன் இந்த உலகம் சுற்றும் வாலிபன் எனலாம்.

தமிழகத்தைச் சேர்ந்த சயின்டிஸ்ட் முருகனாக இதில் எம்ஜிஆர் நடித்திருந்தார். படம் வெளியான போது, எம்ஜிஆர் ரசிகர்கள் குடும்பத்துடன் வண்டிகட்டிக் கொண்டு வந்து படத்தைப் பார்த்தனர். கொரோனாவுக்கு முன்புவரை தமிழகத்தில் ஏதாவது ஒரு திரையரங்கில் இந்தப் படம் ஓடிக்கொண்டேதான் இருந்தது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகம் சுற்றும் வாலிபனை டிஜிட்டலில் மேம்படுத்தி செப்டம்பர் 3 திரையரங்கில் வெளியிடுகின்றனர். இதேபோல் சிவாஜியின் கர்ணனை வெளியிட்ட போது தமிழகம் முழுவதும் புதிய படங்களுக்கு இணையாக ஓடியது. உலகம் சுற்றும் வாலிபனும் அப்படியொரு வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒரேயொரு குறை, எம்ஜிஆர் ரசிகர்களுக்கான திரையரங்குகள் இல்லாதது.

Also read... முதல்நாளே கசிந்த தனுஷ் ராஷி கண்ணா திருச்சிற்றம்பலம் புகைப்படம்!

எம்ஜிஆர் ரசிகர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்கள். சென்னையை பொறுத்தவரை ஸ்டார், மேகலா போன்று ஒரு டஜன் திரையரங்குகள் எம்ஜிஆர், சிவாஜி படங்களை திரையிடுவதற்கென்றே இருந்தன. இப்போது அவற்றில் ஒன்றுகூட இல்லை. அனைத்தையும் இடித்துவிட்டனர். அந்த திரையரங்குகள் இருந்த இடங்கள் மண்டபங்களாகவும், ஷாப்பிங் மால்களாகவும் மாறிவிட்டன. மால்களில் இயங்கும் மல்டிபிளக்ஸ்களில் உலகம் சுற்றும் வாலிபனை வெளியிட்டால் ரிக்ஷா ஓட்டுகிறவரும், பூ தொடுக்கிற பெண்மணியும், நரிக்குறவர்களும் எப்படி படத்தை பார்க்க முடியும்
Published by:Vinothini Aandisamy
First published: