Home /News /entertainment /

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை!

சிவகார்த்திகேயன் - மரியா

சிவகார்த்திகேயன் - மரியா

இந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தை சுரேஷ் புரோடக்ஷன்ஸுடன் இணைந்து வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் தயாரிக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
சிவகார்த்திகேயன் நடிக்கும் 20-வது படத்தை தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூப்பர் அப்டேட் வெளியாகி உள்ளது.

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டான் விரைவில் திரைக்கு வருகிறது. தற்போது அவர் தனது 20-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தெலுங்கின் பிரபல இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். இவர் நவீன் பொலிஷெட்டி நடித்த ஜதி ரத்னலு வெற்றிப் படத்தை இயக்கியவர். தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது. புதுச்சேரியை சேர்ந்த கைடு ஒருவருக்கு வெளிநாட்டு பெண் மீது ஏற்படும் காதல் தான் இந்தப் படத்தின் மையக் கதை என கூறப்படுகிறது.

இசை என்பதே ஏமாற்று வேலை தான் - இளையராஜா ஏன் அப்படி சொன்னார்?

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், நவீன் பொலிஷெட்டி, பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். இதில் உக்ரைனை சேர்ந்த மாடலும் நடிகையுமான Maria Riaboshapka இந்தப் படத்தில் நாயகியாக நடிப்பதாக செய்தி வெளியிட்டு இருந்தோம். இப்போது படக்குழு அதனை உறுதிசெய்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் பிரசாந்த் விரைவில் இரண்டாவது திருமணம்?

இந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தை சுரேஷ் புரோடக்ஷன்ஸுடன் இணைந்து வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் தயாரிக்கிறது. மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ் தமன் இசை அமைக்கிறார். சிவகார்த்திகேயன் படத்திற்கு தமன் இசையமைப்பது இதுவே முதல்முறை. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கியது. அடுத்த மாதம் ஏப்ரல் இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Sivakarthikeyan

அடுத்த செய்தி