முதல் பட ஷூட்டிங் முடியும் முன்பே உயிரிழந்த தமிழ் சினிமா இயக்குநர் - பிரபல நடிகை இரங்கல்

உடுக்கை என்ற படத்தை இயக்கி வந்த அறிமுக இயக்குநர் பாலமித்ரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக நடிகை சஞ்சனா சிங் தனது சமூகவலைதள பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

முதல் பட ஷூட்டிங் முடியும் முன்பே உயிரிழந்த தமிழ் சினிமா இயக்குநர் - பிரபல நடிகை இரங்கல்
அறிமுக இயக்குநர் பாலமித்ரன் உடன் நடிகை சஞ்சனா
  • Share this:
கொரோனா லாக்டவுனில் நடிகர் இர்ஃபான் கான், ரிஷி கபூர் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் சிலர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தனர். சமீபத்தில் கன்னட நடிகரும், நடிகர் அர்ஜூனின் உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார். அதேபோல் பாலிவுட் சின்னத்திரை நடிகர்கள் மன்மீத் கெர்வால் பொருளாதார நெருக்கடி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தமிழில் ஜி.வி.பிரகாஷின் 4ஜி பட இயக்குநர் அருண் பிரசாத் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவரது முதல் திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இத்தகைய மரணங்கள் அவர்களது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தின.

இந்நிலையில் உடுக்கை என்ற படத்தை இயக்கி வந்த அறிமுக இயக்குநர் பாலமித்ரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்ததாக நடிகை சஞ்சனா சிங் கூறியுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், என்னுடைய உடுக்கை பட இயக்குநர் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். மிகவும் இனிமையான மனிதர். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் பாலமித்ரன் பக்கவாதம் மற்றும் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: மரணமடைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாஸ்டர் பட பாடலுக்கு செய்த டிக்டாக் வீடியோ
First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading