Home /News /entertainment /

மாதவன் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்

மாதவன் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்

ராக்கெடரி: நம்பி எபெக்ட், உதயநிதி ஸ்டாலின்.

ராக்கெடரி: நம்பி எபெக்ட், உதயநிதி ஸ்டாலின்.

இந்த திரைப் படத்தில் மாதவனுடன் தமிழ் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 

  • News18
  • Last Updated :
மாதவன் நடித்து இயக்கியுள்ள  ராக்கெடரி: நம்பி எபெக்ட் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடவுள்ளார். 

விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ராக்கெட்டரி: நம்பி எபெக்ட் என்ற தலைப்பில் மாதவன் புதிய திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். அந்த திரைப்படத்தில் மாதவன் வெள்ளை முடி,  தாடியுடன் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதை முதலில் வேறு இயக்குனர் இயக்குவதாக இருந்தது. பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் மாதவனே ராக்கெட்டரி நம்பி எபெக்ட் திரைப்படத்தை இயக்கினார். இதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக படத்தை வெளியிட முடியாமல் இருந்தார் மாதவன்.

இந்த நிலையில் ராக்கெட்டரி திரைப்படத்தை வரும் ஜூலை 1-ம் தேதி வெளியிட உள்ளார். அதுவும் தமிழகத்தின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

இந்த திரைப் படத்தில் மாதவனுடன் தமிழ் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.  விஞ்ஞானி நம்பி நாராயணன் சந்தித்த பிரச்சனைகளையும்,  அவர் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து ராக்கெட்டரி: நம்பி எபெக்ட் திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

Also read... ஜெயிலர் படத்துக்காக அதிக சம்பளம் பெறும் நடிகர் ரஜினிகாந்த்... எத்தனை கோடிகள் தெரியுமா?

இந்த திரைப்படத்தை மக்களிடம் பிரபலப்படுத்தும் வேலையில் நடிகர் மாதவன் இறங்கியுள்ளார். இந்தப் படம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Madhavan, Udhayanidhi Stalin

அடுத்த செய்தி