Home /News /entertainment /

மனைவி கிருத்திகாவின் ‘பேப்பர் ராக்கெட்’ ரிலீஸ் .. உதயநிதியின் அடடே பதிவு!

மனைவி கிருத்திகாவின் ‘பேப்பர் ராக்கெட்’ ரிலீஸ் .. உதயநிதியின் அடடே பதிவு!

உதயநிதி - கிருத்திகா

உதயநிதி - கிருத்திகா

பேப்பர் ராக்கெட் தொடரின் குழுவுக்கும் வாழ்த்துக்களை உதயநிதி பதிவு செய்து சீசன் 2வுக்கு வெயிட்டிங் எனவும் தெரிவித்துள்ளார்.

    இயக்குனரும் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகாவின் ’பேப்பர் ராக்கெட்’ ரிலீஸுக்கு உதயநிதி ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். 

    ஜி 5 நிறுவனம் வழங்க கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ளது வெப் சீரிஸ் 'பேப்பர் ராக்கெட்'. இந்த வெப் தொடர் நேற்றைய தினம் ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் காளிதாஸ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு கே.ரேணுகா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தரன் குமார் இசையமைத்துள்ள இந்தத் தொடரின் பாடல்கள் ஏற்கெனவே ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் வெப் தொடர் ரிலீஸ் ஆகி பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.



    ரசிகர்களை நம்பி களத்தில் குதித்த பிக் பாஸ் அக்‌ஷரா!

    இந்நிலையில் 'பேப்பர் ராக்கெட்' வெப் சீரிஸ் ரிலீஸுக்கும், தொடரின் குழுவுக்கும் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். கிருத்திகாவுடன் எடுத்துக் கொண்ட க்யூட்டான புகைப்படத்தை ட்விட்டரில் ஷேர் செய்து அதில் என்னுடைய இயக்குனர் என குறிபிட்டு கிருத்திகாவை டேக் செய்துள்ளார். ”ஜி 5 தளத்தில் வெளியான பேப்பர் ராக்கெட் தொடருக்கு வாழ்த்துக்கள், உன்னுடைய சிறந்த படைப்பு” என குறிப்பிட்டுள்ளார். பின்பு பேப்பர் ராக்கெட் தொடரின் குழுவுக்கும் வாழ்த்துக்களை உதயநிதி பதிவு செய்து சீசன் 2வுக்கு வெயிட்டிங் எனவும் தெரிவித்துள்ளார்.



    இதை பார்த்த ரசிகர்கள், உதயநிதியின் பதிவுக்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். பேப்பர் ராக்கெட்டின் கதை என்று பார்த்தால்,
    மாற்று திறனாளிகள் ஆசிரமத்திற்கு ஆலோசகராக செல்கிறார் காளிதாஸ் . அவர்களின் விருப்பப்படி, அவர்களை அழைத்து கொண்டு ஒரு பயணம் மேற்கொள்கிறார். அந்த பயணத்தின் போது நடந்த சுவாரஸ்யங்களை வித்தியாசமாக சொல்லி இருக்கிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Kollywood, Tamil Cinema, Udhayanithi Satlin, Zee tamil

    அடுத்த செய்தி