உதயநிதி ஹீரோவாக நடித்து வரும் மாமன்னன் படத்தில் பகத் பாசிலின் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலினும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் இடம்பெற்றுள்ளார்.
நீண்ட நாளுக்கு பின்னர் முக்கிய கேரக்டரில் வடிவேலு நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் மிஷ்கின், பகத் பாசில் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள். ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதையும் படிங்க - அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…
வடிவேலுவுக்கு அரசியல்வாதி கேரக்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும், உதயநிதிக்கு அப்பாவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பகத் பாசிலுக்கு அரசியல்வாதி கேரக்டர் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய வில்லனாக பகத் பாசில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதியின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க - நம்ம நஸ்ரியாவா இது! ஷாக்கான ரசிகர்கள் - ஹாட் போட்டோஸ்
இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் இடம்பெற்ற உதயநிதி, முந்தைய படங்களில் போல் இல்லாமல் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
இதேபோன்று கடந்த வாரம் வெளியான விக்ரம் படத்திலும் பகத் பாசில் இடம் பெற்று மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சீக்ரெட் போலீசாக அமர் என்ற கேரக்டரில் வரும் பகத் பாசிலின் நடிப்பை விக்ரம் படத்தை பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.