Home /News /entertainment /

கார்த்தி திரைப்படத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்

கார்த்தி திரைப்படத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்

சர்தார் படத்தில் கார்த்தி

சர்தார் படத்தில் கார்த்தி

கார்த்தி நடித்திருக்கும் சர்தார் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

கார்த்தி நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் சர்தார். இந்த திரைப்படத்தில் கார்த்தி இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார். குறிப்பாக ஒரு தோற்றத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா ஓ.டி.டி தளத்திற்கு விற்பனை செய்துள்ளனர். அதேபோல் தற்போது தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

Also read... திரையுலகில் என்றும் 16-ஆக ஜொலிக்கும் நடிகை த்ரிஷா

இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த திரைப்படத்தில் நாயகியாக ராசி கண்ணா நடிக்கிறார். அதேபோல் முதன்முறையாக பிஎஸ் மித்ரன் இயக்கும் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சர்தார் திரைப்படத்தை வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் பிரின்ஸ் பிக்சர் திட்டமிட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Karthi, Udhayanidhi Stalin

அடுத்த செய்தி