ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரபாஸ் படத்தின் வெளியீட்டால் சிக்கலில் உதயநிதி ஸ்டாலின்...!

பிரபாஸ் படத்தின் வெளியீட்டால் சிக்கலில் உதயநிதி ஸ்டாலின்...!

Udhayanithi Stalin

Udhayanithi Stalin

Udhayanidhi Stalin: பிரபாஸுக்கு தமிழகத்தில் அவ்வளவாக ரசிகர்கள் இல்லை. எனினும் எதற்கும் துணிந்தவனின் வசூலை பிரபாஸ் படம் சிறிதளவு பாதிக்க வாய்ப்புள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

பிரபாஸ் நடித்திருக்கும் ராதே ஷ்யாம் திரைப்படத்தை மார்ச் மாதம் 11 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்து இருப்பது உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது இந்தியில் வெளியான ஆர்டிகிள் 15 திரைப்படத்தின் தமிழ் தழுவல். இதுதவிர பல படங்களை வாங்கி வெளியிடுகிறார். அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.

இந்தப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவித்திருந்தனர். கொரோனா பெரும் தொற்று மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஜனவரியில் வெளியாக வேண்டிய திரைப்படங்கள் தள்ளிப் போனதால் எதற்கும் துணிந்தவன் படத்தையும் தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பிப்ரவரி 4-ஆம் தேதிக்குப் பதில் மார்ச் 10ஆம் தேதி படம் வெளியாகும் என்று நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஒரு நாள் முடிவதற்குள் நேற்று காலை ராதே ஷ்யாம் படக்குழு மார்ச் 11 ஆம் தேதி தங்கள் திரைப்படம் வெளியாகும் என அறிவித்தது.

இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. ஒரு நாள் இடைவெளியில் இரண்டு பிரமாண்ட திரைப்படங்கள் வெளியானால் இரண்டின் வசூலும் பாதிக்கப்படும். இரண்டின் விநியோகஸ்தரும் உதயநிதி என்றவகையில் இதன் பாதிப்பை சந்திக்கப் போகிறவர் அவர்தான்.

பிரபாஸுக்கு தமிழகத்தில் அவ்வளவாக ரசிகர்கள் இல்லை. எனினும் எதற்கும் துணிந்தவனின் வசூலை பிரபாஸ் படம் சிறிதளவு பாதிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் எதற்கும் துணிந்தவனுக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும் போது பிரபாஸின் படம் அடி வாங்கவும் வாய்ப்புள்ளது.

Also read... பார்த்திபனின் இரவில் நிழல் திரைபடத்தில் மூன்று ஆஸ்கார் விருதாளர்கள்!

எதற்கும் துணிந்தவன் தெலுங்கிலும் மார்ச் 10ஆம் தேதி வெளியாகிறது. ஆந்திரா, தெலுங்கானாவை பொறுத்தவரை சூர்யாவை விட பிரபாஸுக்கு மார்க்கெட் அதிகம். பிரபாஸ் படத்துடன் எதற்கும் துணிந்தவன் மோதி ஜெயிப்பது கடினம். தமிழகத்தில் ராதே ஷ்யாமுக்கு ஏற்பட்டிருக்கும் அதே நெருக்கடி தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெளியீட்டு சிக்கல்கள் இத்துடன் நிற்கப்போவதில்லை. ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் வருகையால் மேலும் பல படங்கள் தங்களுடைய வெளியீட்டு தேதியை கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

First published:

Tags: Actor prabhas, Udhayanidhi Stalin