Home /News /entertainment /

Kalagathalaivan | ’கலகத் தலைவன்’ ஆக உதயநிதி ஸ்டாலின் - வெளியானது புதிய அப்டேட்!

Kalagathalaivan | ’கலகத் தலைவன்’ ஆக உதயநிதி ஸ்டாலின் - வெளியானது புதிய அப்டேட்!

கலகத் தலைவன்

கலகத் தலைவன்

Kalagathalaivan | நிதி அகர்வால் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

  • News18
  • Last Updated :
    மகிழ் திருமேணி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு கலகத் தலைவன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

    இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் கடந்த மே மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 'ஆர்டிக்கள் 15' இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    அதனை தொடர்ந்து, பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலும் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலினும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் இடம்பெற்றுள்ளார்.

    இந்நிலையில், உதயநிதி நடிப்பில் தயாராகி உள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை மீகாமீன், தடையறத்தாக்க, தடம் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். இந்தப் படத்திற்கு, 'கலகத் தலைவன்' என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.



    இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆரவ் இப்படத்தில் உதயநிதிக்கு வில்லனாக நடித்துள்ளார்.

    Also read... தமிழ் சினிமாவின் சகல துறைகளிலும் உச்சம் தொட்ட டி. ராஜேந்தர்

    படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி