உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு சர்வதேச விருது!

Web Desk | news18
Updated: July 10, 2019, 2:26 PM IST
உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு சர்வதேச விருது!
உதயநிதி ஸ்டாலின்
Web Desk | news18
Updated: July 10, 2019, 2:26 PM IST
உதயநிதி ஸ்டாலினின் படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாகவும், தமன்னா வங்கி அதிகாரியாகவும் நடித்திருந்த படம் ‘கண்ணே கலைமானே’. ஒரு விவசாயிக்கும் வங்கி அதிகாரிக்கும் இடையிலான ஒரு மெல்லிய காதல்தான் இந்தப் படத்தின் ஒருவரி கதை.

தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலமாக உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருந்த இந்தப் படத்தில், வடிவுக்கரசி, வசுந்தரா காஷ்யப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெறுவதாக படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “தாதாசாகெப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு கல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே திரைப்படம் விருது பெறுகிறது” என்று சீனு ராமசாமி கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: இயக்குநர் சங்கத்திற்குள் மதுபாட்டில்கள் வந்தது எப்படி? கரு.பழனியப்பன் கேள்வி

First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...