Home /News /entertainment /

இரவின் நிழலை பாராட்டிய உதயநிதியை, ‘சின்னவர்’ என்றழைத்த பார்த்திபன்…

இரவின் நிழலை பாராட்டிய உதயநிதியை, ‘சின்னவர்’ என்றழைத்த பார்த்திபன்…

உதயநிதி - பார்த்திபன்

உதயநிதி - பார்த்திபன்

‘சின்னவர் உதயநிதி’ : கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னை சின்னவர் என்று அழையுங்கள் என உதயநிதி கூறியதாக தகவல் பரவியது.

    இரவின் நிழல் படத்தை பாராட்டிய உதயநிதி ஸ்டாலினை, படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான பார்த்திபன் ‘சின்னவர்’ என்று அழைத்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக சின்னவர் உதயநிதி என்ற சொற்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பார்த்திபன் உதயநிதியை சின்னவர் என்று அழைத்து மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

    பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல் திரைப்படம் இம்மாதம் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    இதையும் படிங்க - பிங் நிற புடவையில் கலக்கும் நடிகை திஷா பதானி - வைரலாகும் போட்டோஸ்!

    ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் இரவின் நிழல் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மேலும், சர்வதேச சினிமா திருவிழாக்களில் இரவின் நிழல் திரைப்படம் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

    இந்த நிலையில் இரவின் நிழல் படத்தை பார்த்துள்ள உதயநிதி ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சாதாரண திரைப்படம் எடுப்பதற்கே அசாதாரண உழைப்பு தேவைப்படுகிறது, அசாதாரணமான இரவின் படத்தை எடுக்க பார்த்திபன் சாரால் மட்டுமே முடியும். அவருக்கும் ஏ.ஆர்.ரகுமான் சார் உள்ளிட்ட ‘இரவின் நிழல்’ டீம்-க்கும் என் வாழ்த்துகள்.’ என்று பாராட்டியுள்ளார்.



    இதற்கு பதிலளித்து பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில் ‘சாதல் சாதாரணம்.சாதித்தல் அசாதாரணம். அதற்கான முயற்சியும் உழைப்பும் சதா ரணம்.கண்டுணர்ந்து பாராட்டுதல் பெருங்குணம்.உயர்த்திப் பிடிக்க உதவுதல் உயர்குணம்.இந்நிமிட கடைசி முதல், அடுத்த முதல் வரை அங்கீகாரமே ஆக்ஸிஜன்.நன்றி சின்னவரே!’ என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க - கல்யாணம் ஆன வெறும் 45 நாளில் சூப்பர் சிங்கர் அஜய் - ஜெஸ்ஸி எடுத்த அதிரடி முடிவு!

    கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னை சின்னவர் என்று அழையுங்கள் என உதயநிதி கூறியதாக தகவல் பரவியது. இதுகுறித்து மீம்சுகள் பல வெளியான நிலையில், தான் அப்படி சொல்லவில்லை என்று உதயநிதி விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் சின்னவர் என்று உதயநிதியை அழைத்து பரபரப்பை கிளப்பியுள்ளார் பார்த்திபன்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Parthiban, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி