‘தளபதி’ என்ற அடைமொழியுடன் விஜய்க்கு வாழ்த்து சொன்ன உதயநிதி ஸ்டாலின்

நடிகர் விஜய்க்கு தளபதி என்ற அடைமொழியுடன் வாழ்த்து கூறியுள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

‘தளபதி’ என்ற அடைமொழியுடன் விஜய்க்கு வாழ்த்து சொன்ன உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் | நடிகர் விஜய்
  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், ரசிகன் படத்திலிருந்து இளைய தளபதி விஜய் என்று அழைக்கப்பட்டு வந்தார். இதையடுத்து தொடர்ந்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்து ரசிகர்களின் இதயம் கவர்ந்த நாயகனாக திகழ்ந்த அவர் தற்போது தளபதி என்ற அடைமொழியுடன் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

அதேவேளையில் திமுக தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலினையும் தொண்டர்கள் தளபதியார் என்றே அழைத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்யின் 46-வது பிறந்தநாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி பதிவிட்டிருக்கும் நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், “நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர். திரையில் வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர்... என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: 'மாண்புமிகு மாணவன்' முதல் 'மாஸ்டர்' வரை..! நடிகர் விஜயின் திரைப்பயணம் #HBDTHALAPATHYVijay

பார்க்க: ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை இந்துஜா... புடவையில் நடத்திய போட்டோ ஷூட்

உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து செய்தியைப் பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading