ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உண்மையை உடைத்த உதயநிதி... நெல்சன் திலீப் குமாரை சாடும் விஜய் ரசிகர்கள்

உண்மையை உடைத்த உதயநிதி... நெல்சன் திலீப் குமாரை சாடும் விஜய் ரசிகர்கள்

உதயநிதி - விஜய் - நெல்சன்

உதயநிதி - விஜய் - நெல்சன்

தளபதி 65-வது படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருந்ததாக முன்பே செய்தி அடிப்பட்டது. இந்நிலையில் ‘குறுக்க வந்த கெளஷிக் நீங்க தானா?’ என்ற ரேஞ்சில் உதயநிதியை கேட்டு வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உதயநிதி ஸ்டாலின் சொன்ன ஒரு விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விஜய் ரசிகர்கள், பீஸ்ட் இயக்குநர் நெல்சன் திலீப் குமாரை இணையத்தில் சாடி வருகிறார்கள்.

  'மீகாமன்', 'தடம்' ஆகியப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மகிழ் திருமேனி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'கலகத் தலைவன்' படத்தை இயக்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

  கலகத் தலைவன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க, பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு இன்று கலகத் தலைவன் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஹே புயலே’ என்ற பாடல் வெளியானது. மதன் கார்க்கி எழுதியிருக்கும் இப்பாடலை ஷ்ரேயா கோஷல் மற்றும் சத்ய பிரகாஷ் பாடியுள்ளனர்.

  இந்நிலையில் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த உதயநிதி, “இந்தப் படத்துக்கு முன்னாடி அவருக்கு (மகிழ் திருமேனி) மிகப்பெரிய ஹீரோ கிட்ட இருந்து வாய்ப்பு வந்துச்சு. நான் அதை பண்ணிட்டு வந்துடட்டுமான்னு கேட்டாரு, அதெல்லாம் முடியாது என்கிட்ட பண்ணிட்டு அப்புறம் போங்கன்னேன். அவரு நினைச்சிருந்தாருன்னா அந்த பெரிய படத்தை பண்ணிருக்கலாம். இந்த கதைக்கு என் கூட அவர் படம் பண்ண நினைச்சதுக்கு இந்த நேரத்துல அவருக்கு நான் நன்றி சொல்ல விரும்புறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

  நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்?

  தளபதி 65-வது படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருந்ததாக முன்பே செய்தி அடிப்பட்டது. இந்நிலையில் ‘குறுக்க வந்த கெளஷிக் நீங்க தானா?’ என்ற ரேஞ்சில் உதயநிதியை கேட்கும் விஜய் ரசிகர்கள், நீங்க மட்டும் அப்படி சொல்லாம இருந்திருந்தா, இந்த பீஸ்ட்டுக்கு பதில் எங்களுக்கு ஒரு நல்ல படம் பார்த்த அனுபவம் கிடைத்திருக்கும். நெல்சனும் வந்திருக்க மாட்டார் என தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Thalapathy Vijay, Nelson dilipkumar, Udhayanidhi Stalin