Inban Udhayanidhi: 4 தலைமுறை குடும்பப் படத்தை வெளியிட்ட இன்பன் உதயநிதி!

மகன் இன்பநிதியுடன் உதயநிதி ஸ்டாலின்

தினம்தோறும் தனது தொகுதிக்கு சென்று, அங்கு மேற்கொள்ளும் பணிகளை தவறாமல் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துக் கொள்கிறார்.

  • Share this:
    உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் வெளியிட்டுள்ள குடும்பப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் வழி பேரனும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக இருந்து, நடிகரானார். தற்போது கண்ணை நம்பாதே, ஏஞ்சல், ஆர்ட்டிக்கிள் 15 ரீமேக் ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு திமுக-வின் இளைஞரணி செயலாளரான உதய், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக களம் கண்டு பெரும் வெற்றியையும் பெற்றிருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தினம்தோறும் தனது தொகுதிக்கு சென்று, அங்கு மேற்கொள்ளும் பணிகளை தவறாமல் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துக் கொள்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உதயநிதியின் மனைவி கிருத்திகா தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த பெண் இயக்குநர்களுள் ஒருவர். வணக்கம் சென்னை, காளி ஆகியப் படங்களை இயக்கியுள்ளார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் இருக்கிறார்கள்.




    இந்நிலையில் நேற்று முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது நான்கு தலைமுறை படத்தைப் பகிர்ந்துக் கொண்டார் இன்பா. அதில் கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என நான்கு தலைமுறையினர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்தப் படம் தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: