Home /News /entertainment /

மகன் இன்பனின் ஆர்ம்ஸை பார்த்து ஆச்சர்யப்பட்ட உதயநிதி - வைரலாகும் படம்!

மகன் இன்பனின் ஆர்ம்ஸை பார்த்து ஆச்சர்யப்பட்ட உதயநிதி - வைரலாகும் படம்!

இன்பன் - உதயநிதி ஸ்டாலின்

இன்பன் - உதயநிதி ஸ்டாலின்

திமுக-வின் இளைஞரணி செயலாளரான உதய், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு பிரமாண்ட வெற்றியையும் பெற்றார்.

    தனது மகன் இன்பநிதியுடனான புதியப் படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்.

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் வழி பேரனும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக இருந்து, நடிகரானார். தற்போது மாமன்னன் மற்றும் பெயரிடப்படாத மகிழ் திருமேனியின் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    திமுக-வின் இளைஞரணி செயலாளரான உதய், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு பிரமாண்ட வெற்றியையும் பெற்றார். ஒரு சட்ட மன்ற உறுப்பினர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதைப் போல, தனது தொகுதியில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

    விஜய்யின் அரபிக் குத்து பாடலை அச்சு அசலாக மறு உருவாக்கம் செய்த ரசிகர்கள் - வைரல் வீடியோ!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உதயநிதியின் மனைவி கிருத்திகா தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த பெண் இயக்குநர்களுள் ஒருவர். வணக்கம் சென்னை, காளி ஆகியப் படங்களை இயக்கியுள்ளார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் இருக்கிறார்கள்.



    இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது மகன் இன்பநிதியுடனான படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் தனது மகனின் ஆர்ம்ஸை ஆச்சர்யமாக பார்க்கிறார் உதய். இந்தப் படம் தற்போது லைக்ஸை குவித்து வருகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி