Home /News /entertainment /

உதயநிதி வெளியிட்ட மாமன்னன் படப்பிடிப்பு தள படம்!

உதயநிதி வெளியிட்ட மாமன்னன் படப்பிடிப்பு தள படம்!

உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ்

உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ்

உதயநிதி நடிப்பில் கடைசியாக வெளியான நெஞ்சுக்கு நீதி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜுடன் மாமன்னன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ’பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகியப் படங்களை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை வைத்து புதிய படமொன்றை இயக்க தயாரானார். இதற்கிடையே நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தனக்கொரு படம் இயக்கக் கேட்டுக் கொண்டார். அந்தப் படம் தான் மாமன்னன்.

    இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பகத் பாசில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் வைகைப்புயல் வடவேலும் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    ’மனிதன் மனிதன்' பாடல் டைட்டிலில் இடம்பெற்றது ரஜினி சாரால் தான் - ஏவிஎம் அருணா குகன்!

    உதயநிதி நடிப்பில் கடைசியாக வெளியான நெஞ்சுக்கு நீதி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே மாமன்னன் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் மாரி செல்வராஜுடன் எடுத்துக் கொண்ட படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் உதயநிதி. அதில் மாரி செல்வராஜின் பின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து சிரித்தபடி இருக்கிறார் உதய். இந்தப் படம் ரசிகர்களிடம் லைக்ஸ்களைப் பெற்று வருகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி