ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலாக இந்த தேர்தல் அமையும் - உதயநிதி ஸ்டாலின்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறினால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலாக இந்த தேர்தல் அமையும் - உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
  • News18
  • Last Updated: April 18, 2019, 12:33 PM IST
  • Share this:
ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலாக இந்த தேர்தல் அமையும் என்று உதயநிதி ஸ்டாலின் வாக்களித்தப்பின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இன்று மாலை 6 வரை நடைபெறுகிறது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே அரசியல் கட்சியினர், பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் தொடர்ந்து தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.


Also read... வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் நடிகர் சிவகார்த்திக்கேயன் வாக்களிக்கவில்லை...!

இந்நிலையில், சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் வாக்களித்த பின் நடிகர் உதயநிதி ஸ்டாலின்  செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மக்கள் ஆர்வமுடன் காலையிலிருந்து வாக்களித்து வருகின்றனர். ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலாக இந்த தேர்தல் அமையும் என்றும் தெரிவித்தார்.

Loading...

மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறினால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...