ஆமிர் கான் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சத்தா படத்தை பார்த்த உதயநிதி
ஸ்டாலின், படம் சிறப்பாக உள்ளதென பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமீர்கான் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கிரண் ராவ் மற்றும் வயாகம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ படத்தில், அமீர்கானுடன் கரீனா கபூர் கான், மோனா சிங், சைதன்யா அக்கினேனி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான ‘ஃபாரஸ்ட் கெம்ப்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
ஆமிர் கானின் கனவு படைப்பான ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தை, இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடைய செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.
இதுவரை வெளியாகாத விக்கி - நயனின் புதிய புகைப்படங்களை வெளியிட்ட Netflix
அதனடிப்படையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘லால் சிங் சத்தா’ படத்தை தமிழில் வழங்குவதுடன், தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், தொடக்கத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு பொருத்தமான மற்றும் முக்கியமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. இந்த பட்டியலில் அமீர்கானின் ‘ லால் சிங் சத்தா’வும் இணைந்திருக்கிறது.
இதேபோன்று லால் சிங் சத்தாவின் தெலுங்கு பதிப்பை மெகா ஸ்டார் சிரஞ்சீவி வெளியிடுகிறார். இந்நிலையில் படத்தை பார்த்துவிட்டு நடிகரும், விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘லால் சிங் சத்தா மிகவும் அருமையான படம். ஆமிர் கான் சாருக்கு ஹேட்ஸ் ஆஃப். இந்த படத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.
அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, சாதனை படைத்து வருகிறது. அவரின் உலக அளவிலான ரசிகர்கள், அவரது கதாப்பாத்திரத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல்களும் வெளியாகி, இணையத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தி, ட்ரெண்டிங்கில் தொடர்ந்து இருக்கிறது. மேலும் படக்குழுவினர், படத்தின் ஆத்மார்த்தமான உணர்வை தாங்கியிருக்கும் பாடல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.