முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜெயம் ரவி படத்தை வெளியிடும் உதயநிதி!

ஜெயம் ரவி படத்தை வெளியிடும் உதயநிதி!

உதயநிதி ஜெயம்ரவி

உதயநிதி ஜெயம்ரவி

ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. 

பூலோகம் திரைப்படத்தின் இயக்குனர் கல்யாணுடன் ஜெயம் ரவி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் அகிலன். அந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. அகிலன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் டைட்டில் வென்றது இவர்களா? 2வது இடம் குறித்த தகவலும் வெளியானது!

இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் வியாபார பணிகளையும் தொடங்கியுள்ளது.  அதில் முதல் கட்டமாக தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது.  உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பல திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் அருள்நிதி நடிப்பில் வெளியான டைரி திரைப்படத்தை வெளியிட்டனர். அதே இன்று விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.  இந்த நிலையில் ஜெயம் ரவி நடித்திருக்கும் அகிலன் திரைப்படத்தின் உரிமையையும் ரெட் ஜெயன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Vinayagar Chaturthi: ஜெயிலர் விநாயகர் சிலையை வடிவமைத்த ரஜினி ரசிகர்!

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீட்டு தேதியுடன் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது. அகிலன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Jayam Ravi, Kollywood, Tamil Cinema, Udhayanidhi Stalin