Home /News /entertainment /

ஆமிர்கான் படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்… இன்று வெளியாகிறது அறிவிப்பு

ஆமிர்கான் படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்… இன்று வெளியாகிறது அறிவிப்பு

ஆமிர்கான் - உதயநிதி

ஆமிர்கான் - உதயநிதி

Laal Singh Chaddha : லால் சிங் சத்தா திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. இந்த திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க படமான ஃபாரஸ்ட் கம்ப் (Forrest Gump)-ஐ தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

ஆமிர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா (Laal Singh Chaddha ) திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

தமிழ் திரையில் உருவான பல பெரும் திரைப்படங்களை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டு வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்ட காத்துவாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம் உள்ளிட்ட பல படங்கள் வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்துள்ளன.

இதை அடுத்து தற்போது ஹிந்தியில் ஆமிர் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் லால் சிங் சத்தா  திரைப்படத்தை தமிழில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

‘வெல்கம் டூ சென்னை’ – ரஜினி வெளியிட்ட செஸ் ஒலிம்பியாட் பாடல்

நகைச்சுவை ஃபார்முலாவில் எடுக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். அதில் ஆமிர்கானுடன் கரீனா கபூர், தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லால் சிங் சத்தா  திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது.

மரணம் குறித்து முன்பே பதிவிட்ட பிரதாப் போத்தன்! வைரலாகும் கடைசி ஃபேஸ்புக் பதிவு

இந்த திரைப்படம் 1994 ஆம்  ஆண்டு வெளியான அமெரிக்க படமான ஃபாரஸ்ட் கம்ப் (Forrest Gump)-ஐ தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லால் சிங் சத்தா ட்ரெய்லரைப் பார்க்க...



இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதற்காக அறிவிப்பு மாலை வெளியாகிறது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
Published by:Musthak
First published:

Tags: Aamir Khan

அடுத்த செய்தி