Home /News /entertainment /

சந்தானம் படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்!

சந்தானம் படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்!

உதயநிதி - சந்தானம்

உதயநிதி - சந்தானம்

ஓகே ஓகே, நண்பேண்டா உள்ளிட்ட படங்களில் தன்னுடன் நகைச்சுவை நடிகராக நடித்த சந்தானம், நாயகனாக நடித்துள்ள குலு குலு படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறார் உதயநிதி. 

சந்தானம் நடித்துள்ள குளுகுளு திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. 

மேயாத மான், ஆடை படங்களில் இயக்கியவரும்,  மாஸ்டர், விக்ரம் திரைப்படங்களின் வசனகர்த்தாவுமான  ரத்னகுமார் தற்போது ‘குலுகுலு’ படத்தை இயக்கியுள்ளார். சந்தானம் நாயகனாக நடித்துள்ள அந்தப் படம் ஜூலை 28-ம் தேதி வெளியாகிறது. நகைச்சுவை பின்னணியில் உருவாகியிருக்கும் அந்தப் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம்  வெளியிடுகிறது.

13வது ஆண்டு திருமண நாள்... கணவர் வித்யாசாகர் பிரிவால் கலங்கி நிற்கும் நடிகை மீனா!

குலு குலு படத்தின் வெளியீடு நெருங்குவதால் படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்களை அடுத்தடுத்து வெளியிடவுள்ளனர். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். எனவே பாடல்களும் பின்னணி இசையும் கவனம் பெறும் என படக்குழுவினர் நம்புகின்றனர். சந்தானம் நடித்துள்ள குலு குலு படத்தை தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை வெளியிடும் உதயநிதியின் முதல் படமான ஓகே ஓகே படத்தில் சந்தானம் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக அவரின் காமெடி காட்சிகள் அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

குலு குலு படத்தின் போஸ்டர்


அதை தொடர்ந்து நண்பேண்டா உள்ளிட்ட படங்களிலும் சந்தானம் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் குலு குலு படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Actor Santhanam, Kollywood, Tamil Cinema, Udhayanidhi Stalin

அடுத்த செய்தி