Home /News /entertainment /

ஊரடங்கு தளர்வு - களத்தில் இறங்கிய உதயநிதியின் ரெட் ஜெயண்ட்!

ஊரடங்கு தளர்வு - களத்தில் இறங்கிய உதயநிதியின் ரெட் ஜெயண்ட்!

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

விஷ்ணு விஷாலுடன் கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

தமிழகத்தில் இரவு ஊரடங்கும், வார இறுதி முழு ஊரடங்கும் தளர்த்தப்பட்ட நிலையில் திரைப்படங்கள் அதிக அளவில் திரையரங்குகளில் வெளியாக ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. விஷ்ணு விஷால் நடித்திருக்கும் ஆக்சன் திரைப்படம் எப்ஐஆர். மனு ஆனந்த் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷாலுடன் கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோரும் நடித்துள்ளனர். அஸ்வந்த் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

இத்திரைப்படம் 2022 பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என சென்ற வருட இறுதியிலேயே அறிவித்திருந்தனர். அதன்படி பிப்ரவரி 11-ஆம் தேதி படத்தை வெளியிடுகின்றனர். படம் இந்த தேதியில் வெளியாக உதயநிதியின் ரெட் ஜெயண்ட் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.  பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்த சன் பிக்சர்ஸின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தள்ளி வைக்கப் பட்டுள்ள நிலையில் பிப்ரவரி 11ஆம் தேதி எப்ஐஆர் திரைப்படம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Udhayanidhi Stalin

அடுத்த செய்தி