Home /News /entertainment /

வெற்றிமாறனின் விடுதலை படத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

வெற்றிமாறனின் விடுதலை படத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

விடுதலை

விடுதலை

சூரி மற்றும் விஜய்சேதுபதி தனித்தனியாக இடம்பெற்றிருக்கும் இரண்டு புதிய போஸ்டர்களும் வெளியாகியுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    வெற்றிமாறன் முழுமையான வெற்றியை பெற்ற இந்திய இயக்குநர்களில் ஒருவர் என்றே சொல்லலாம். தற்போது எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு விடுதலை படத்தை இயக்கி வருகிறார். அதில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். படத்தை எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்டும், வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனியும் இணைந்து தயாரித்துள்ளன. படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா.

    விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகின. முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு படத்தில் இயக்குநர் ராஜிவ் மேனன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் தற்போது விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதோடு கலைஞர் டிவி இதன் சேட்டிலைட் உரிமத்தைப் பெற்றுள்ளது. தவிர, சூரி மற்றும் விஜய்சேதுபதி தனித்தனியாக இடம்பெற்றிருக்கும் இரண்டு புதிய போஸ்டர்களும் வெளியாகியுள்ளன.

    வெவ்வேறு கண்டத்திலிருந்து வருகிறோம், நாங்கள் சேருமிடம் எப்போதும் தமிழ்நாடு தான்! - இளையராஜாவுடனான வீடியோவை பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்!



    விரைவில் திரையரங்குகளில் எனக் குறிப்பிடப்பட்டுள்ள அதில், ”உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
    செம்மல் சிதைக்கலா தார்” என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது.

    இதன் பொருள், ”நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்” என்பதாகும்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Director vetrimaran, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி