Udhayanidhi Stalin: கதைகளில் கவனம் செலுத்தும் உதயநிதி ஸ்டாலின் - அடுத்தப் படத்தின் இயக்குநர் இவர் தான்!

உதயநிதி ஸ்டாலின்

தேர்தல் வேலைகளில் பிஸியாக இருந்த உதயநிதி, சமீபத்தில் படப்பிடிப்புக்கு திரும்பினார்.

  • Share this:
    இயக்குநர் மாரி செல்வராஜுடன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். திமுக-வின் இளைஞரணி செயலாளரான அவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு, அபார வெற்றி பெற்றார். இதையடுத்து தினமும் தொகுதிக்கு சென்று பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    தேர்தல் வேலைகளில் பிஸியாக இருந்த உதயநிதி, சமீபத்தில் படப்பிடிப்புக்கு திரும்பினார். தற்போது ‘கண்ணை நம்பாதே’, ‘ஆர்டிகிள் 15’ ரீமேக், மகிழ் திருமேனியின் பெயரிடாதப் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இந்தப் படங்களை முடித்தப் பிறகு, அடுத்ததாக இயக்குநர் மாரி செல்வராஜுடன் இணையவிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ’கர்ணன்’ படத்திற்குப் பிறகு துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இதையடுத்து மீண்டும் தனுஷ் படத்தை இயக்க இருக்கிறார். இவற்றை முடித்தப் பிறகு உதயநிதியின் படத்தை இயக்குவதாகவும், இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: