ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான 'நெஞ்சுக்கு நீதி' பட ட்ரெய்லர் வெளியீடு...

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான 'நெஞ்சுக்கு நீதி' பட ட்ரெய்லர் வெளியீடு...

நெஞ்சுக்கு நீதி

நெஞ்சுக்கு நீதி

இந்தியில் மெகா ஹிட்டான ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் பெற்றிருந்தார். இந்தப் படம் தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் உருவாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் அவர் முதன் முறையாக போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இந்தியில் மெகா ஹிட்டான ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் பெற்றிருந்தார். இந்தப் படம் தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் உருவாகியுள்ளது. கனா படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

படத்தில் உதயநிதியுடன், தன்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன் , ஷிவானி ராஜசேகர், ரவி வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கனா, பேச்சலர் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க - ‘பல விருதுகள் உங்களுக்காக காத்திருக்கிறது தங்கச்சி’ – கீர்த்தி சுரேஷை பாராட்டிய சூரி

இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

நெஞ்சுக்கு நீதியின் ஒரிஜினல் படமான ஆர்ட்டிகிள் 15-ல் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்திருப்பார். ஐபிஎஸ் அதிகாரியான அவர், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 ஏழை சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான சம்பவத்தை விசாரிப்பார்.

இதையும் படிங்க - விஜய் ரசிகர்களுக்கு மெகா அப்டேட்… தளபதி 66 ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்

அப்போது சாதி பாகுபாடு, ஏற்றத் தாழ்வுகள் விசாரணைக்கு எந்த விதத்தில் தடைகளை ஏற்படுத்துகின்றன என்பதை திரைக்கதை விவரிக்கும். மதம், சாதி, பாலினம், பிறப்பிடம் என எதன் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்பதை, இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 15 உறுதி செய்கிறது. இதன் அடிப்படையில் படத்தின் தலைப்பான ஆர்ட்டிகள் 15-ம், படத்தின் கதையும் ஒன்றிப் போனது.

Published by:Musthak
First published:

Tags: Udhayanidhi Stalin