ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சைக்கோ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? மிஷ்கின் பதில்

சைக்கோ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? மிஷ்கின் பதில்

மிஷ்கின் - உதயநிதி ஸ்டாலின்

மிஷ்கின் - உதயநிதி ஸ்டாலின்

உதய் ஒரு மிகப்பெரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் அவர் எவ்வளவு அடக்கமானவர் என்பதைக் குறிப்பிட்டார் மிஷ்கின்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உதயநிதி ஸ்டாலினின் சைக்கோ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு இயக்குநர் மிஷ்கின் பதிலளித்துள்ளார்.

  டைரக்டர் மிஷ்கினும், உதயநிதி ஸ்டாலினும் இணைந்து சூப்பர் ஹிட் த்ரில்லர் படமான சைக்கோவில் பணிபுரிந்தனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வருமா என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், கலக தலைவனின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மிஷ்கின் இந்தப் படம் குறித்த விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

  உதயநிதி ஸ்டாலினின் கலக தலைவன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்வில் இயக்குனர் மிஷ்கின் கலந்துக் கொண்டார். அதில் அவர் பேசும் போது, உதய் ஒரு மிகப்பெரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் அவர் எவ்வளவு அடக்கமானவர் என்பதைக் குறிப்பிட்டார்.

  உதயநிதி தனது தொழில் மற்றும் அரசியலில் மைல் கற்களை எட்டியிருந்தாலும், அவர் மனதால் மாறவில்லை என்று அவர் கூறினார். அதோடு, தனது சைக்கோ திரைப்படத்தைப் பற்றியும் பேசினார் மிஷ்கின். சைக்கோ 2 உருவாகாது என்று கூறிய அவர், நிச்சயமாக உதய்யுடன் கூடிய விரைவில் சிறந்த படத்தில் பணியாற்றுவதாகவும் குறிப்பிட்டார்.

  வெண்பஞ்சு மேகம்... வெள்ளை உடையில் ஐஸ்வர்யா லெக்‌ஷ்மியின் வாவ் படங்கள்!

  மறுபுறம், உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படமான கலகத் தலைவன் 2022 நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து, நிதி அகர்வால், ஆரவ் மற்றும் கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Director mysskin, Udhayanidhi Stalin