Home /News /entertainment /

படைப்புகளின் நாயகனாக ஜொலிக்கும் உதயநிதி!

படைப்புகளின் நாயகனாக ஜொலிக்கும் உதயநிதி!

உதயநிதி

உதயநிதி

ஒரு சிறந்த நடிகரை அடையாளம் கண்டு கொண்டபின் தமிழ் சினிமா உதயநிதி ஸ்டாலினின் கால்ஷீட்டை ஹவுஸ் புல் ஆக்கியது

    உதயநிதி சம நீதி பேசி நடித்திருக்கும் திரைப்படமான ‘நெஞ்சுக்கு நீதி’ திரைக்கு வரவுள்ள நிலையில் அவரின் திரைப்பயணம் குறித்த ஒரு பதிவு.

    பராசக்தியில் தன் பேனா முனையில் திரை உலகத்தை புரட்டி போட்ட கருணாநிதியின் பேரன் என்ற அடை மொழியோடு திரையுலகில் கால் பதித்தார் உதயநிதி ஸ்டாலின். விஜய் நடித்த ‘ குருவி’ திரைப்படம் இவரை தயாரிப்பாளராகவும்… ‘ விண்ணை தாண்டி வருவாயா’ இவரை விநியோகஸ்தராகவும் அடையாளம் காட்டியது. ஆர்யா..சூர்யா என இவர்களின் திரைப்படங்களை தயாரித்த உதயநிதி ஒரு நடிகராகவும் உருமாறினார். ஆம்.. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தில் ஹன்சிகாவின் நாயகனாக உதயமானார் உதய நிதி.

    இதையும் படிங்க..பாரதி கண்ணம்மா சீரியலுக்கு என்ன ஆச்சு? கடுப்பில் ரசிகர்கள்!

    ’ஹன்சிகா இல்லைனா நயன்தாரா’ என இவர் அடுத்து நயன்தாராவின் நாயகனாக ‘’இது கதிர்வேலன் காதல்’ திரைப்படத்தில் கதிர்வேலனாக காதல் படித்தார். அது முதல் முன்னணி இளம் நாயகர்களின் வரிசையிலும் அமர்ந்தார் உதயநிதி. தொடர்ந்து உதய நிதியின் நடிப்பு பரிமாணமும் சற்று பூசி இவர் நடித்த ’கெத்து’… ’நண்பேண்டா’…. ’மனிதன்’ போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. குறிப்பாக நண்பேண்டாவில் வழக்கமான சாக்லேட் பாய் பாத்திரம் செய்த உதயநிதி, மனிதனில் இயல்பான இளைஞராக…. வாதாடும் வழக்ககறிஞராக வலம் வந்து நடிப்பில் ஒரு சன்னாக ஜொலித்தார்.

    இயக்குனர் எழில் இயக்கிய, சரவணன் இருக்க பயமேன் திரைப்படத்தில் காதல் நகைச்சுவை என ’எம்புட்டு இருக்கு ஆசை என பாடி…. அடுத்து ’பொதுவாக என் மனசு தங்கம்’ என தமிழ் சினிமாவிற்கு சொன்ன உதயநிதியின் வெற்றிப்படமாக அமைந்தது ‘நிமிர்’ திரைப்படம். அமைதியான தந்தைக்கு மகனாக, காதலியைக் கண்டு உருகும் எளிய காதலனாக, காதலியைத் தொலைத்து நிற்கும் ஏமாளியாக என ஒரு எதார்த்த நடிப்பை கொடுத்த உதயநிதியை பாராட்டியது தமிழ் சினிமா.

    இதையும் படிங்க..குக் வித் கோமாளி ஸ்ருதிகாவுக்கு எந்த வயசுல திருமணம் நடந்தது தெரியுமா? அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!

    மிஸ்கினின் ‘சைக்கோ; திரைப்படத்தில் ஹீரோ உதயநிதி என்றதும் ஆச்சரியப்பட்டு போனது கோடம்பாக்கம். அந்த ஆச்சரியம் ஏமாற்றம் அளிக்காமல் மிஸ்கினின் கதாநாயகனாக மிஸ்கின் நாயகர்களின் உடல் மொழியில் பார்வை குறைபாடு உள்ள மாற்று திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து மெழுகாய் உருகவைத்தார் உதயநிதி.



    மிஸ்கினின் சைக்கோவில் ஒரு சிறந்த நடிகரை அடையாளம் கண்டு கொண்டபின் தமிழ் சினிமா உதயநிதி ஸ்டாலினின் கால்ஷீட்டை ஹவுஸ் புல் ஆக்கியது. தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கும் பாலிவுட்டில் வெளியான த்ரில்லர் படமான ’ஆர்டிக்கிள் 15’ ன் தமிழ் ரீமேக்கான ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளிவந்து உண்மைகளை உலகறிய செய்யும் படைப்புகளின் மற்றுமொரு நாயகனாக உதயநிதியை அடையாளம் கண்டுள்ளது தமிழ் சினிமா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Kollywood, Tamil Cinema, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி