மாமன்னன் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலுவுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
’பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகியப் படங்களை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை வைத்து புதிய படமொன்றை இயக்க தயாரானார். இதற்கிடையே நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தனக்கொரு படம் இயக்கக் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியானார் உதயநிதி ஸ்டாலின்.
தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளியான நிலையில், தற்போது படத்தின் வேலைகள் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில் படத்திற்கு மாமன்னன் எனப்பெயரிடப்பட்டுள்ளதாக, படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்தனர். இதில் கீர்த்தி சுரேஷ், வைகைப்புயல் வடிவேலு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, படத்திற்கு இசையமைக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இதைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' திரைப்படம் கடந்த வாரம் பூஜையுடன் துவங்கியது.
இந்தப் படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு நேற்று முன் தினம் கலந்துக் கொண்டார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் நடிக்க தொடங்கியிருப்பதால், மாமன்னன் படக்குழு அவரை அன்புடன் வரவேற்றது. படப்பிடிப்பின் போது வடிவேலு கிராமப்புற தோற்றத்தில் காணப்பட்டார். இது மாரி செல்வராஜ் இயக்கிய 'கர்ணன்' படத்தில் தனுஷின் தோற்றத்தை ஓரளவு ஒத்திருந்தது.
ரஜினி காந்தின் தலைவர் 169 படத்தில் பிரியங்கா மோகன்? அதுவும் இந்த கதாபாத்திரத்திலா?
Happy faces wherever you look. #Vadivelu sir from the sets of #MAAMANNAN.👏🎉@mari_selvaraj @Udhaystalin @KeerthyOfficial @arrahman #FahadhFaasil @thenieswar @editorselva @kabilanchelliah @kalaignartv_off @MShenbagamoort3 @SonyMusicSouth @teamaimpr pic.twitter.com/9v1PpjN6Jc
— Red Giant Movies (@RedGiantMovies_) March 14, 2022
உதயநிதி மற்றும் மாரி செல்வராஜ் இணையும் மாமன்னன் படம் கிராமத்து பின்னணியில் உருவாவதை இணையத்தில் வைரலான படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், இயக்குனரின் முந்தைய இரண்டு சூப்பர்ஹிட் படங்களான 'பரியேறும் பெருமாள்' மற்றும் 'கர்ணன்' போலவே, சமூகத்திற்கு தேவையான செய்தியை இந்தப் படமும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஸ்வர்யாவை பத்தி பேச எனக்கு உரிமை இல்ல, என் தங்கச்சி எப்போவும் நல்லாருக்கணும் - ராகவா லாரன்ஸ்
'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு சேலம் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் போது நடிகர் உதயநிதி இரு சக்கர வாகனத்தில் சென்றதில் இருந்து அவரின் தோற்றம் வெளியானது. அரசியலில் முழு கவனம் செலுத்தவிருக்கும் உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படமாக 'மாமன்னன்' இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆகையால் இந்தப் படம் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vadivelu, Udhayanidhi Stalin