உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ் இணையும் படத்திற்கு ’மாமன்னன்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.
’பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகியப் படங்களை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை வைத்து புதிய படமொன்றை இயக்க தயாரானார். இதற்கிடையே நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தனக்கொரு படம் இயக்கக் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.இதற்கிடையே நகர்ப்புற உஓள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியானார் உதயநிதி ஸ்டாலின்.
தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளியான நிலையில், தற்போது படத்தின் வேலைகள் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில் படத்திற்கு மாமன்னன் எனப்பெயரிடப்பட்டுள்ளதாக, படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இது தான் விஜய்யின் சொகுசு பங்களாவா? கவனம் பெறும் புகைப்படம்!
இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பகத் பாசில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் வைகைப்புயல் வடவேலும் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரியும்... மேடை நாடக நடிகர் ரஜினி தெரியுமா?
தற்போது ரசிகர்களிடையே இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.