Home /News /entertainment /

கலைஞர் தொலைக்காட்சி தந்த உத்தரவாதம் - மாநாடு வெளிவந்த பின்னணி

கலைஞர் தொலைக்காட்சி தந்த உத்தரவாதம் - மாநாடு வெளிவந்த பின்னணி

சிம்பு

சிம்பு

மைக்கேல் ராயப்பன், முரளி போன்ற ஒருசிலர்தான் மாநாடு தீபாவளிக்கு வெளிவர விடாமல் தடுக்கின்றனர் என்று சிம்புவின் பெற்றோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.

  • News18
  • Last Updated :
மாநாடு ஒருவழியாக வெளியாகி அமோக ஆதரவுடன்  ஓடிக்கொண்டிருக்கிறது. நவம்பர் 25 படம் வெளியாகும் என்று பல வாரங்களாக போஸ்டர் அடித்து விளம்பரப்படுத்திவிட்டு நேற்று மாலை படத்தின் தயாரிப்பாளர் படம் வெளியாகாது என்று சொன்னதும், இரவு ஒன்பது மணிக்கு படம் வெளியாகும் என அறிவித்ததும், அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதும் த்ரில்லர் படங்களை மிஞ்சும் திருப்பங்கள். உண்மையில் என்ன நடந்தது?

மாநாடு பிரச்சனை அண்ணாத்தயில் இருந்து தொடங்கியது. தீபாவளிக்கு மாநாடு வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். அண்ணாத்த தீபாவளிக்கு வெளியாவதால் எனிமி படத்துக்கு 250 திரையரங்குகள் கிடைக்குமா என்பது இழிபறியாக இருந்தது. இதில் மாநாடு படமும் வெளியானால் எங்கு போய் திரையிடுவார்கள்? இதனால், நவம்பர் 25 ஆம் தேதிக்கு பட வெளியீட்டை மாற்றினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

ஆனால், மைக்கேல் ராயப்பன், முரளி போன்ற ஒருசிலர்தான் மாநாடு தீபாவளிக்கு வெளிவர விடாமல் தடுக்கின்றனர் என்று சிம்புவின் பெற்றோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தனர். படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை என்றால் முதல்வர் வீட்டு முன் உண்ணாவிரதம் இருக்கவும் தயங்க மாட்டேன் என்றார் உஷா ராஜேந்தர். தயாரிப்பாளர் எடுத்த முடிவுக்கு மற்றவர்கள் தலையில் மிளகாய் அரைக்கப்பட்டது.

மாநாடு படத்தின் தமிழக உரிமையை வைத்து தயாரிப்பாளர் பைனான்சியரிடம் வாங்கிய தொகை 18 கோடிகள் என சொல்லப்படுகிறது. வட்டியோடு இது 25 கோடிகளை தாண்டியுள்ளது. தமிழக திரையரங்கு உரிமையை வாங்குவதாக சொன்னவர் முழுவதுமாக பணத்தை தரவில்லை. தவிர படத்தின் சேட்டிலைட், டிஜிட்டல் உரிமையும் விற்கப்படவில்லை. இதனால், பைனான்சியரிடம் வாங்கிய பணத்தை தயாரிப்பாளரால் திருப்பித்தர முடியவில்லை. அதன் காரணமாகவே நேற்று மாலை ஆறு மணியளவில் சுரேஷ் காமாட்சி படம் வெளியாகாது என்று அறிவித்ததாக கூறுகிறார்கள்.

பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் கலைஞர் தொலைக்காட்சி படத்தின் சேட்டிலைட் உரிமையை சுமார் எட்டு கோடிகளுக்கு வாங்குவதாக வாக்களித்ததாகவும், டிஜிட்டல் உரிமையில் எத்தனை கோடி கிடைக்குமோ அதனை அன்புச்செழியன் தர முன்வந்ததாகவும், மீதி தொகைக்கு டி.ராஜேந்தரும், ஐசரி கணேஷும் உத்தரவாதமளித்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் பிறகே படம் திட்டமிட்டபடி வெளியாகும் என இரவு ஒன்பது மணியளவில் அறிவிக்கப்பட்டது. காலையில் இந்தப் பிரச்சனைகளின் மிச்சசொச்சம் காரணமாக அதிகாலை சிறப்புக் காட்சிகள் நடத்தப்படவில்லை. உடனே பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டு காலை ஏழு மணிக்கு மேல் படம் திரையிடப்பட்டது.

Also read... மாநாடு : திரையரங்குகளை திருவிழாவாக்கிய சிம்பு ரசிகர்கள் - படங்கள்!
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Simbhu, Maanaadu

அடுத்த செய்தி