ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அவர் ஒரு மேஜிசியன்...  அவரோட படம் பன்ன இன்னொரு வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும் - பிரபல இயக்குநரை புகழ்ந்த உதயநிதி!

அவர் ஒரு மேஜிசியன்...  அவரோட படம் பன்ன இன்னொரு வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும் - பிரபல இயக்குநரை புகழ்ந்த உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி நடிப்பில் 'கலகத் தலைவன்' திரைப்படம் வருகிற நவம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் மாரி செல்வராஜ் ஒரு மேஜிசியன்,  அவரோட படம் பன்ன இன்னொரு வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் புகழ்ந்துள்ளார்.

மீகாமீன், தடையறத்தாக்க, தடம் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் கலகத் தலைவன்.  இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆரவ் இப்படத்தில் உதயநிதிக்கு வில்லனாக நடித்துள்ளார். அவர்களுடன் கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் 'கலகத் தலைவன்' படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது.இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது. 'கலகத் தலைவன்' திரைப்படம் வருகிற நவம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் உதயநிதி உட்பட பலர் பிசியாக உள்ளனர். இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். கலகத் தலைவன் படம் குறித்து மட்டும் பேசாமல் அவரது நடிப்பில் வெளியான மற்றும் வெளிவர உள்ள படங்கள் குறித்தும் பேசினார்.

Also read... 26 வருடங்களை நிறைவு செய்தது கமலின் அவ்வை சண்முகி

அப்போது இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் நான் மாரி செல்வராஜ் உடன் இணைந்து படம் பன்ன ஆசைபடுகிறேன் என்றும் தெரிவித்தார், மேலும் அவர் ஒரு மேஜிசியன் மாமன்னன் படம் ஷூட்டிங் போது டார்ச்சர் செய்வார். ஆனால் அந்த சீனை திரும்ப பார்க்கும் போது அவ்வளவு நிறைவா இருக்கும், நான் தான் நடித்தேனா என்று தோனும் அளவுக்கு இருக்கும் என்றும் மாரி செல்வராஜை புகழ்ந்தார் உதயநிதி ஸ்டாலின்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Udhayanidhi Stalin