முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நெருக்கடி நிலை, கழகம், கலைஞர்: சார்பட்டா பரம்பரைக்கு உதயநிதி பாராட்டு!

நெருக்கடி நிலை, கழகம், கலைஞர்: சார்பட்டா பரம்பரைக்கு உதயநிதி பாராட்டு!

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை

ஆர்யா ஏற்று நடித்துள்ள கபிலன் கதாபாத்திரம் மட்டுமல்லாது, பசுபதி ஏற்று நடித்துள்ள ரங்கன் வாத்தியார், டாடி, டான்சிங் ரோ, வேம்புலி, மாரியம்மாள் போன்ற கதாபாத்திரங்களும் ரசிகர்களை ஈர்த்துள்ளது.குறிப்பாக திமுக கட்சிக்காரராக பசுபதியின் நடிப்பை பலரும் பராட்டி வருகின்றனர்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்துள்ள சார்பட்டா பரம்பரை முக்கியமான திரைப்படம் என சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிஎம்.எல்.ஏ.வும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில்  ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேற்று முன்தினம் ஓடிடி தளத்தில் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது. பலரும் சார்பட்டா திரைப்படத்தை சிறந்த படைப்புகளில் ஒன்றாக கொண்டாடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க: அமலா பால் ஹாட் புகைப்படங்கள்.. பிரேம்ஜி கமெண்ட் - கடுப்பான ரசிகர்கள்!

ஆர்யா ஏற்று நடித்துள்ள கபிலன் கதாபாத்திரம் மட்டுமல்லாது, பசுபதி ஏற்று நடித்துள்ள ரங்கன் வாத்தியார், டாடி, டான்சிங் ரோ, வேம்புலி, மாரியம்மாள் போன்ற கதாபாத்திரங்களும் ரசிகர்களை ஈர்த்துள்ளது.குறிப்பாக திமுக கட்சிக்காரராக பசுபதியின் நடிப்பை பலரும் பராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சார்பட்டா திரைப்படத்துக்கு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ 70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ’சார்பட்டா பரம்பரை' முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் - கலைஞர் - கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது என்று பாராட்டியுள்ளார்.

இதையு படிங்க: நடிகர் ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது - விஷால் ட்வீட்!

இதேபோல், கபிலனாக அசத்தியுள்ள நண்பர் @arya_offl, கழகத்துக்கார்-ரங்கன் வாத்தியாராக @PasupathyOffl சார், டான்ஸிங் ரோஸ் @shabzkal, வேம்புலி @johnkokken1,#JohnVijay என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர் இயக்குநர் @beemji-க்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

First published:

Tags: DMK, Sarpatta parambarai, Udhayanidhi Stalin