இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரான பிறகு திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை எனவும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமனிதன் தான் தனது கடைசி படம் என்றும் அறிவித்தார் உதயநிதி ஸ்டாலின். மேலும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கவிருந்த படம் கைவிடப்படுவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில் உதயநிதி நடிப்பில் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த கண்ணை நம்பாதே படம் வருகிற 17-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள் பட இயக்குநர் மு.மாறன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வுகளில் உதயநிதி தற்போது பங்கேற்றுவருகிறார். அந்த வகையில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நான் ரெட் ஜெயன்டிலிருந்து வெளியே வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது.
Naragasooran ☹️pic.twitter.com/CCoStViwWR
— Karthik Ravivarma (@Karthikravivarm) March 12, 2023
எனக்கும் ரெட் ஜெயன்டுக்கும் எந்த நேரடித் தொடர்பும் கிடையாது. இந்தப் படத்தையும் அவர்கள்தான் வெளியிடுகிறார்கள். அவர்களுக்கு நன்றி. இளைஞர்கள் அரசியல் பேசுங்கள்; சினிமாவை சினிமாவாக பாருங்கள். வதந்திகளை உடனே நம்பிவிடாதீர்கள் என்று பேசினார்.
திரைப்படங்கள் குறித்து பேசும்போது தனது கருத்தை எந்த தயக்கமும் இல்லாமல் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அது அடிக்கடி வைரலாவது வழக்கம். அந்த வகையில் கண்ணை நம்பாதே படம் தொடர்பான விழாவில் இயக்குநர் மு.மாறன், நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடிகை ஆத்மிகா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அந்த வீடியோவில் பேசிய மு.மாறன், ’நரகாசுரன் படத்தைப் பார்க்கும்போது ஆத்மிகாவின் நடிப்பு பிடித்திருந்தது. இதனால் அவரை இந்தப் படத்தில் நடிக்கவைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது என்றார். அப்போது குறுக்கிட்ட உதயநிதி அந்தப் படம் ரிலீஸே ஆகலையே அந்த படத்தை எப்படி பார்த்தீங்க என்று கேட்க, அதற்கு மு.மாறன், அந்தப் படத்தின் டிரெய்லர் பார்த்ததாக கூறினார்.
இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு காத்திருக்கும் படங்கள்... நாட்டு நாட்டு பாடல் சாதிக்குமா?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Udhayanidhi Stalin