Home /News /entertainment /

ரஜினி படத்தைத் தொடர்ந்து கமல் படத்தின் உரிமையை வாங்கிய உதயநிதி!

ரஜினி படத்தைத் தொடர்ந்து கமல் படத்தின் உரிமையை வாங்கிய உதயநிதி!

கமல் ஹாசன் விக்ரம்

கமல் ஹாசன் விக்ரம்

ஆக்ஷன் படமான இதில் மூன்று முக்கிய நாயகர்கள் நடித்துள்ளதால் ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தொடர்ச்சியாக பெரிய படங்களின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை வாங்கி வருகிறது.

ரஜினியின் அண்ணாத்த படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை அவர்கள் தான் வாங்கினர். சமீபத்தில் வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையையும் அவர்கள் தான் வாங்கியிருந்தனர். விரைவில் வெளிவரவிருக்கும் கமலின் விக்ரம் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையையும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

அரபிக் குத்து பாடலுக்கு ஷில்பா ஷெட்டி, ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அட்டகாச நடனம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்பட பலர் நடித்திருக்கும் விக்ரம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

Baakiyalakshmi: தங்கையின் முதல் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிய பாக்கிய லட்சுமி இனியா!

ஆக்ஷன் படமான இதில் மூன்று முக்கிய நாயகர்கள் நடித்துள்ளதால் ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது. கமலின் இதுவரையான படங்களின் விற்பனையை விக்ரம் தாண்டும் என்கிறார்கள் ட்ரேட் அனலிஸ்டுகள். தமிழக திரையரங்கு விநியோக உரிமையை எத்தனை கோடிகளுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஜுன் 3 ஆம் தேதி விக்ரம் திரைக்கு வருகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Kamal Haasan, Udhayanidhi Stalin

அடுத்த செய்தி