Home /News /entertainment /

பெற்றோர்களும் குழந்தைகளும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் கார்கி - உதயநிதி ஸ்டாலின்!

பெற்றோர்களும் குழந்தைகளும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் கார்கி - உதயநிதி ஸ்டாலின்!

சாய் பல்லவி - உதயநிதி ஸ்டாலின்

சாய் பல்லவி - உதயநிதி ஸ்டாலின்

கார்கி இந்த ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று! தியேட்டரில் சென்று பாருங்கள்! அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்!

    கார்கி படத்தை கட்டாயம் பெற்றோர்களும் குழந்தைகளும் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார் நடிகரும், தயாரிப்பாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்.

    நிவின் பாலி - த்ரிஷா நடிப்பில் வெளியான 'ரிச்சி' படத்தை இயக்கிய கெளதம் ராமச்சந்திரன் தற்போது கார்கி என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி, காளி வெங்கட், காலேஷ் ராமானந்த் (ஹிருதயம்) ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை கோவிந்த் வசந்தா.

    கார்கி படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி உணர்ச்சிவசப்பட்டு மேடையில் அழுதது, சினிமா வட்டாரத்தில் தலைப்புச் செய்தியானது. கார்கி படத்தை தமிழில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    காதலரை கரம் பிடித்த யாரடி நீ மோகினி நக்‌ஷத்ரா!

    இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்தின் 50-வது நாள் கொண்டாட்டத்தில் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், “இன்னைக்கு கார்கி என்ற ஒரு நல்ல திரைப்படம் பார்த்தேன். மிகவும் அருமையாக எடுத்திருக்கிறார்கள். சூர்யாவும் ஜோதிகா மேடமும் அதை வெளியிடுவதாக சொன்னார்கள். பொதுமக்கள் இந்த மாதிரி நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். ஒரு புதிய டீம் மிகவும் நன்றாக செய்திருக்கிறார்கள். கௌதம் ராமச்சந்திரன் என்ற புதிய இயக்குனர். இந்த மாதிரி நல்ல படங்களை ஓட வையுங்கள். அப்பொழுது தான் இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் அனைவருக்கும் ஒரு நல்ல படம் கொடுக்க வேண்டும், கதை சார்ந்த படங்கள் கொடுக்க வேண்டும் என்ற தைரியம் வரும்” எனப் பாராட்டி இருந்தார்.

    அப்போ ஷாருக்கான், இப்போ ரன்பீர் கபூர் - பாலிவுட் பிரபலங்களை இம்ப்ரெஸ் செய்த டிடி!



    இது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள உதய், “கார்கி இந்த ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று! தியேட்டரில் சென்று பாருங்கள்! அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்! பெற்றோர்களும் குழந்தைகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

    எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிக்கும் கார்கி திரைப்படம், வரும் 15-ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி